மேத்யூ, மார்க், லூக்கா, ஜான் என பைபிளின் நான்கு புத்தகங்களிலும் குருத்தோலை ஞாயிறு பற்றிய வரலாற்று குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகங்களின்படி, இயேசு கிறிஸ்து ஜெருசலேமில் நுழைந்தபோது அங்குள்ள மக்கள், பனை கிளைகள் மற்றும் தங்களின் ஆடைகளை அவரின் முன்பு விரித்து அவரை வரவேற்றனர்.
பனை கிளைகள் மற்றும் ஆடைகளை விரித்ததன் முக்கியத்துவம்:
மரியாதை மற்றும் மதிப்பு அளிக்கும் வகையில் கோட்டுகள் மற்றும் பனை கிளைகளை இயேசு கிறிஸ்து முன்பு விரிக்கப்பட்டது. பொதுவாக, மதிப்புமிக்க தலைவர் அல்லது மன்னர் செல்லும் பாதையில் ஆடை உள்ளிட்ட பொருள்கள் விரிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படும். அதேபோல, வெற்றியின் சின்னமாக பனை கிளைகள் கருதப்படுகிறது. பெரும்பாலும், வெற்றிபெற்ற ஹீரோக்களை வரவேற்ற இது பயன்படுத்தப்படுகிறது.
குருத்தோலை ஞாயிறு என்றால் என்ன?
குருத்தோலை ஞாயிறு என்பது தவக்காலத்தின் இறுதி ஞாயிறு ஆகும். ஈஸ்டருக்கு முந்தைய ஞாயிறு ஆகும். இந்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி, அதாவது இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
குருத்தோலை ஞாயிறு எப்படி கொண்டாடப்படும்?
இயேசு ஜெருசலேமுக்குள் நுழைந்ததையும், அவர் சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுப்பப்படுவதற்கு வழிவகுத்த நிகழ்வுகளின் நினைவூட்டலாக கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு தினத்தை நினைவுகூருகிறார்கள்.
ஜெருசலேமில் நடந்தது போன்றே பனை மரக்கிளைகளானது குருத்தோலை ஞாயிறு தினத்தன்று ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் வழங்கப்படும்.
மத ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது மட்டும் இன்றி, உலகின் பல்வேறு பகுதிகளில் இந்த தினம், கலாசார மற்றும் சமூக முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
குருத்தோலை ஞாயிறு தினத்தன்று பல நாடுகளில், ஊர்வலங்கள் நடத்தப்படும். மக்கள் வண்ணமயமான ஆடைகளை அணிந்துகொண்டு, இயேசு மற்றும் புனிதர்களின் சிலைகளை எடுத்துச் செல்வார்கள். இந்த ஊர்வலங்கள் மிகவும் புனிதமானதாகவும் உணர்வுப்பூர்வமாக இருக்கும். எனவே, இவை மக்கள் கூட்டத்தை ஈர்க்கின்றன.
குருத்தோலை ஞாயிறு என்பது இயேசுவின் வாழ்க்கை மற்றும் போதனைகள் மற்றும் அவரது தியாகத்தின் அர்த்தத்தை பிரதிபலிக்கும் நாளாக கிறிஸ்தவர்கள் கருதப்படுகிறது.
இயேசு தம் வாழ்நாள் முழுவதும் காட்டிய பணிவையும் அன்பையும் நினைவுகூர்ந்து, ஈஸ்டர் கொண்டாட்டத்திற்குத் தயாராக வேண்டிய நேரம் இது.
மேலும் படிக்க: IPL 2023 RCB vs MI: பெங்களூர் vs மும்பை அணிகள் இன்று மோதல்.. 15 ஆண்டுகளாக ஐபிஎல் வரலாறு சொல்வது என்ன?