காட்டில் வாழும் விலங்குகளில் எப்போதும் பலமான விலங்காக கருதப்படுவது சிங்கம். ஆண் சிங்கமாக இருந்தாலும், பெண் சிங்கமாக இருந்தாலும் அதன் வலிமை தனித்துவமானது. வேட்டையாடுவதிலும் சரி, எதிரி விலங்குகளுடன் சண்டையிடுவதிலும் சிங்கத்தின் பலத்திற்கு ஈடு சிங்கம் மட்டுமே..


கயிறு இழுத்த சிங்கம்:


உலகின் பல நாடுகளில் சிங்கங்கள் வனவிலங்கு பூங்காக்களில் சிங்கங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வெளிநாடு ஒன்றில் பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும் பெண் சிங்கத்திற்கும், இளைஞர்களுக்கும் இடையே கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது.






இதில் கூண்டின் ஒரு புறம் சுற்றுலா பயணிகள் கூட்டத்தில் இருந்து 3 வலுவான இளைஞர்கள்( பவுன்சர்களை போல காட்சி தருகின்றனர்) கயிற்றை இழுக்க, மறுமுனையில் கூண்டின் மறுபுறம் உள்ள பெண் சிங்கம் தனது வாயால் கயிற்றை இழுத்துப்பிடித்து வைத்துள்ளது. சிங்கத்தின் வலுவான பற்கள் மூலமாக அந்த கயிற்றை இழுத்துப் பிடித்திருக்கிறது.


தோற்றுப்போன இளைஞர்கள்:


மறுமுனையில் அந்த இளைஞர்கள் கயிற்றை தங்கள் முழு பலம் கொண்டு இழுத்தும், சிங்கத்தை ஒரு இஞ்ச் அளவுக்குக் கூட அவர்களால் நகர்த்த முடியவில்லை. இறுதியில் இளைஞர்கள் சோர்வடைந்து கயிற்றை விட்டு விட்டனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். உள்ளே இருந்த மற்றொரு ஆண் சிங்கம் இதை வேடிக்கை பார்க்கிறது.


மேலும் படிக்க: Kamala Harris: சரித்திரம் படைப்பாரா கமலா ஹாரிஸ்? - மல்லுக்கட்டும் 4 பேர், டிரம்பை எதிர்க்கப்போகும் அதிபர் வேட்பாளர் யார்?


மேலும் படிக்க:Kamala Harris: விலகிய ஜோ பைடன் - அமெரிக்காவின் முதல் கறுப்பின பெண் அதிபர் வேட்பாளராகிறார் கமலா ஹாரிஸ்?