டெஸ்லா காரின் கண்ணாடி கூரையின் மீது பெரிய மரம் விழுந்த போதிலும் ஓட்டுநர் எந்த வித காயமும் ஏற்படாமல் தப்பித்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.






இந்த சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது. வெள்ளை நிற டெஸ்லா மாடல் 3 காரின் மீது மரம் விழுவது போன்ற காட்சி சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது.  இதற்கு டெஸ்லாவின் தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார்.






அவ்வளவு பெரிய மரம் சாய்ந்து விழுந்த போதிலும், காரில் எந்த வித பெரிய சேதமும் ஏற்படவில்லை. காரின் எடையை விட நான்கு மடங்கு எடையை டெஸ்லா காரால் தாங்கி நிற்க முடியும். மரமே விழுந்த நிலையிலும், கூரையின் கண்ணாடி உடையவில்லை.  


இந்த விடியோவை ட்விட்டரில் பதிவிட்ட சமூகவலைதள பயனாளி ஒருவர், ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை எனக் கூறியுள்ளார். அதில், "இதற்கிடையில், சீனாவில், டெஸ்லாவின் காரின் கண்ணாடி கூரை மீது மரம் விழுந்த போதிலும், ஓட்டுநர் காயமின்றி வெளியேறினார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


டெஸ்லா மாடல் 3ஆவது கார், உலகின் மிக பாதுகாப்பான வாகனம் என எலான் மஸ்க் முன்னதாக குறிப்பிட்டிருந்தார். தற்போது வெளியான விடியோ குறித்து பதிவிட்டுள்ள அவர், "விபத்து நிகழும் பட்சத்தில் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ள வாகனம் டெஸ்லா மாடல் 3.


அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தால் சோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது" எனக் குறிப்பிட்டுள்ளார்.


இந்த வார தொடக்கத்தில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் டெஸ்லா கார் மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. ஆனால் ஓட்டுநர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண