ரயில் நிலையங்களில் வழங்கப்படும் இலவச வைஃபை வசதியை ஆபாச படங்களை பார்க்கவும் பதிவிறக்கம் செய்யவும் ரயில்வே பயணிகள் அதிகம் பயன்படுத்துவதை RailTail-ன் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் தெலுங்கானாவைச் சேர்ந்த செகந்திராபாத் முதல் இடத்தில் உள்ளது.
இந்தியாவில் இணைய பயன்பாடு என்பது அபரிமித வளர்ச்சியை பெற்று வருகிறது. . அந்த வகையில், பயணிகளை டிஜிட்டல் முறையில் இணைப்பதற்காக ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த வைஃபையை அரை மணி நேரம் அளவு வரை இலவசமாக பயன்படுத்தலாம்.
முதன்முறையாக கடந்த 2016ஆம் ஆண்டில் மும்பை ரயில் நிலையத்தில் இலவச வைஃபை வசதியை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு ரயில் நிலையங்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டு செயல்பட்டில் உள்ளது. இந்நிலையில் இந்த இலவச வைஃபை சேவை ஆபாச படம் பார்க்கவும், டவுன்லோடு செய்யவுமே அதிகம் பயன்படுத்தப் பட்டு வருவது RailTail-ன் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இலவச வைஃபை சேவை வழங்கிவரும் ரெயில்டெல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த தகவலின்படி, தெற்கு மத்திய ரெயில்வேயின் கீழ் வரும் செகந்திராபாத்தில் தான் அதிகபட்சமாக ஆபாச வீடியோக்கள் டவுன்லோடு செய்யப்பட்டு உள்ளன. அதைத் தொடர்ந்து ஐதராபாத், விஜயவாடா மற்றும் திருப்பதி ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன.
RailTail ஆய்வு
செகந்திராபாத் மற்றும் விஜயவாடா ரயில் நிலையங்களில் மட்டும் இலவச வைஃபை சேவையை பயன்படுத்தி 35 சதவீதம் ஆபாச படங்கள் தரவிறக்கம் செய்யப்பட மற்றும் பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. ரயில்வே நிர்வாகம் 588 நிலையங்களுக்கு இணையச் சேவைகளை நீட்டிக்க விரும்பினாலும், ரெயில் நிலையங்களில் இணைய அலைவரிசையின் வேகம் குறைவாக இருப்பதால் 588 நிலையங்களுக்கு இணைய சேவை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலவச வைஃபையை தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றச் சாட்டும் எழுப்பப்பட்டது. இதன்பின் ஆய்வு நடத்திய RailTail, 35% பயணிகள் ஆபாச படங்கள் பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய இலவச இணைய சேவையை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
பெரும்பாலான ஆபாச பட தளங்கள் தடை செய்யப்பட்டுள்ள போதிலும் விபிஎன் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆபாச படங்களை பயனர்கள் தரவிறக்கம் செய்வதாக கூறப்படுகிறது. ரயில் நிலையங்களில் வழங்கப்படும் இணைய சேவையானது, இவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுவது அதிர்ச்சி அளிப்பதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்