லாஸ் வேகசில் சமீபத்தில் நடந்திருக்கும் நிகழ்வு வைரலாகி இருக்கிறது. அடங்காமல் மிரட்டும் பிட் புல் நாயிடமிருந்து வாடிக்கையாளரையும் அவரது சிறிய நாய்க்குட்டியையும் அமேசான் டெலிவரிக்காக வந்த பெண் ஒருவர் காப்பாற்றியிருக்கிறார்.
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
சம்பந்தப்பட்ட பெண் 19 வயதான லாரன் ரே. அவர் தனது வீட்டிற்கு வெளியே ஒரு பிட் புல் வகை நாயைக் கொஞ்சிக்கொண்டு இருந்திருக்கிறார். அதுவும் அமைதியாக அவருடன் விளையாடிக்கொண்டு இருந்திருக்கிறது. சிறிது நேரத்தில் லாரனின் செல்ல நாய்குட்டி வீட்டை விட்டு வெளியே வர அப்போது ஆரம்பித்திருக்கிறது பிட் புல்லின் ரணகளம். எதனாலோ ஆக்ரோஷமான பிட்புல் அந்த நாய்க்குட்டியைக் கோபமாய்த் துரத்த உடனடியாக லாரன் குட்டியைத் தனது தோள்களில் தூக்கிகொண்டு விட்டார்.
ஆனால், பிட் புல் தொடர்ச்சியாக ஆக்ரோஷமாகக் குறைத்துக்கொண்டு அவரின் தோள் உயரத்திற்கு எட்டிக் குதித்து அவரது நாயைப் பிடிக்க முயற்சித்துக்கொண்டே இருந்தது. லாரன் சிறிது நேரம் பிட் புல்லின் கழுத்தைப் பிடித்து கீழே தள்ளிவிட்டு சமாளித்துப் பார்த்திருக்கிறார். ஆனால், விரைவில் அது அச்சுறுத்தும் நிகழ்வாக மாற, அவர் உதவி கேட்டு கத்தினார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அமேசான் டெலிவரி பெண் ஒருவர் அவருக்கும் பிட் புல்லுக்கும் இடையே நின்று நாயின் முன் குதித்து அதை அச்சுறுத்தும் வகையில் ‘கூடாது’ என்று கத்தி பிட் புல்லின் கவனத்தைத் திசை திருப்பியிருக்கிறார். அப்போது லாரன் தனது நாய்குட்டியுடன் பத்திரமாக வீட்டுக்குள் சென்று விட்டார்.
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
நாய்க்குட்டி மறைந்ததைக் கண்ட பிட் புல்லும் அமைதி அடைந்திருக்கிறது. கிளம்பும் முன் நாயைப் பார்த்து, ‘நீ கெட்ட நாய்’ என்று அமேசான் ஊழியர் ஸ்டெஃபனி லான்ஸ் விரலை நீட்டிக் கூறி விட்டு செல்வது புன்னகையை வரவழைப்பதாய் இருந்தது.
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்