அமெரிக்காவில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி வகுப்பு நடத்தி வரும் ஒருவர் துப்பாக்கியை சுத்தம் செய்துக் கொண்டிருந்த போது தவறுதலாக தன் மனைவியை சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவறுதலாக மனைவி மீது துப்பாக்கிச்சூடு:
அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான நியூயார் போஸ்ட் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, கடந்த ஜூலை 15ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. 61 வயதான சிமியோன் ஹென்றிக்சன் தனது வீட்டில் தன் துப்பாக்கி ஒன்றை சரி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த துப்பாக்கியில் இருந்து தவறுதலாக வெளியேறிய தோட்டா அவரின் மனைவி லாரி ஹென்க்ரிசனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையத்து ஹென்ரிக்சன் தன்னுடைய கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் சிமியோன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
காவல்துறையினரை சிமியோன் அழைத்தாரா அல்லது அவரின் அலறல் சத்தம் கேட்டு யாரேனும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனரா என தெரியவில்லை எனக்கூறப்படுகிறது. சிமியோனின் மனைவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அவரும் இறந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
துப்பாக்கி கலாச்சாரம்:
இது குறித்து உயிரிழந்த சிமியோனின் மகன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “ பலரும் இது போன்ற பெற்றோர் வேண்டும் என எதிர்பார்க்க கூடிய பெற்றோர் தனக்கு கிடைத்தனர். அவர்கள் பலரால் நேசிக்கப்பட்டனர், மதிக்கப்பட்டனர். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில், கலிபோர்னியாவில் 3 வயது குழந்தை ஒன்று தவறுதலாக தன் ஒரு வயது சகோதரியை கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. சான் டியாகோ கவுண்டியில் உள்ள ஃபால்ப்ரூக்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது. திங்கள்கிழமை காலை அந்த குழந்தை போலீசாரை தொடர்பு கொண்டதை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது 3 வயது குழந்தை தவறுதலாக தன் ஒரு வயது சகோதரியை சுட்டுக் கொன்றது தெரியவந்தது. குழந்தை வீட்டில் இருந்த பாதுகாப்பற்ற கைத்துப்பாக்கியை எடுத்து இயக்கியது விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் படிக்க,