நைஜீரியாவைச் சேர்ந்த டெம்பு எபெரே (Tembu Ebere) என்பவர் கின்னஸ் சாதனையில் இடபெறுவதற்காக முயற்சி செய்து, பிரச்சனையை சந்தித்துள்ளார்.


கின்னஸ் சாதனை முயற்சி


உலகம் அறிய சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்களே இருக்க முடியாது. சாதனை படைக்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். பிறர் வியப்படையும் வகையில் சாதனை மேற்கொள்ள வேண்டும் என்பதே பலரும் விரும்புவர். சிலர் வாழ்நாள் லட்சியமாகவும் கொண்டிருப்பர். இன்னும் சிலரோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என ஆசை கொண்டிருப்பர். பிரபலமாக வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும். சிலர் தங்களை துன்புறுத்திக்கொண்டு சாதனை முயற்சிகளில் ஈடுபவர். 


அப்படி, நைஜீரியாவைச் சேர்ந்த டெம்பு எபெரே (Tembu Ebere) என்பவர், தங்கள் நாட்டில் பிரபலமாகிக்கொண்டிருக்கும் அசாதாரணமான உலக சாதனைகளை முறியடிப்பதற்காக, நீண்ட நேரம் தொடர்ந்து அழுதால் என்ன என்று திட்டமிட்டிருக்கிறார்.  இந்த முயற்சியில், ஏழு நாள்கள் தொடர்ந்த அழுதுகொண்டே இருந்திருக்கிறார், டெம்பு எபெரே. 


இதனால் அவருக்கு, கடும் தலைவலியோடு முகம், கண்கள் வீங்கி சுமார் 45 நிமிடங்களுக்குத் தற்காலிகமாகக் கண்பார்வையையே இழந்துள்ளதாக கூறப்படுகிறது.


 இந்த முயற்சி பற்றி பேசிய டெம்பு எபெரே, ` நான் கின்னஸ் சாதனை செய்ய வேண்டும் என்பதாலேயே இந்த முயற்சியில் ஈடுபட்டேன். இதனால் என்னுள் ஏற்பட்ட சில  பாதிப்புகளின் காரணமாக, என்னுடைய அழுகையைக் குறைக்க நேர்ந்தது' எனக் கூறினார். ஆனால், இவர் கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், தொடர்ந்து அழும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தாலும்கூட, அவர் தன்னுடைய முயற்சியில் உறுதியாக இருந்தார். ஆனால், அவர் கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்காததால் டெம்பு எபெரேவின் இந்த முயற்சி அதிகாரபூர்வமற்றதாகிவிட்டது.


நைஜீரியாவில் இதுபோல பலர் சில விசித்திர முயற்சிகளை மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம்கூட, ஹில்டா பாசி (Hilda Baci) எனும் 26 வயது சமையல்காரர், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காக 100 மணிநேரம் இடைவிடாமல் சமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்கென்று மிகுந்த சிரத்தையுடன் சமைத்த ஹில்டா பாசி, தொடர்ச்சியாக 93 மணி நேரம் 11 நிமிடங்கள் சமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் வாசிக்க..


Modi Criticize: 56 இன்ச் சதையை துளைக்க 79 நாட்கள்: முதலைக் கண்ணீர் வடிக்கிறார் பிரதமர் மோடி? - வெளியான கடும் விமர்சனம்!


CM Stalin EXCLUSIVE Interview: ஏபிபி நாடுவுடன் முதல்வர் ஸ்டாலின்! பூரண மதுவிலக்கு முதல் வாரிசின் வளர்ச்சிவரை.. சுளீர் கேள்விகளும் பளீர் பதில்களும்! மெகா எக்ஸ்குளூசிவ்