பென்சில்வேனியாவில் உள்ள மார்ஸ் தொழிற்சாலையில் ராட்சத சாக்லேட் தொட்டியில் தவறி விழுந்த இருவரை தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். 


பென்சில்வேனியாவின் லான்காஸ்டர் கவுண்டியின் எலிசபெத்டவுன் என்னும் பெருநகரத்தில் அமைந்துள்ள மார்ஸ் ரிக்லி தொழிற்சாலையில் இரண்டு தொழிலாளர்கள் சாக்லேட் தொட்டியில் விழுந்து உள்ளூர் தீயணைப்புத் துறையால் மீட்கப்பட்டனர்.


மேலும் படிக்க : Korean Film Festival:சென்னையில் நடைபெறும் கொரிய திரைப்பட விழா 2022.. செம்ம அப்டேட்ஸ் இங்க இருக்கு..


முதலில் மார்ஸ் ரிக்லி மிட்டாய் நிறுவனம் மற்றும் எலிசபெத் டவுன் தீயணைப்புத் துறை விபத்து குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தொட்டியில் விழுந்த இருவரும் தொழிற்சாலை ஊழியர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அவர்களால் அங்கிருந்த தொட்டியில் இருந்து மேலே வரமுடியாத காரணத்தினால் வெளியே இழுக்க எலிசபெத்டவுன் தீயணைப்புத் துறையை அழைக்க வேண்டியிருந்தது என்று அந்த நிறுவனம் தகவல் தெரிவித்தது. 




தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் சம்பவ இடத்துக்குச் சென்று, சாக்லேட் தொட்டியில் இருந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இவர்கள் இருவரையும் காப்பாற்ற தொட்டியில் ஒரு துளை வெட்டி, சாக்லேட் முழுவதும் வெளியேறியபிறகு மீட்டுள்ளனர். மேலும், மீட்கப்பட இருவரையும்  ஹெலிகாப்டர் மூலம் உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க: Deepika Padukone in Tirupati : வரிசை கட்டும் பிரபலங்கள்.. திருமலை சென்றடைந்த நயன்தாரா-விக்னேஷ் சிவன்.. எதிர்பார்க்காமல் வந்த தீபிகா படுகோன்..


அதன் பிறகு மார்ஸ் ரிக்லி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், மீட்கப்பட்ட இருவரும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை காரணமாகவே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. அவர்கள் இருவரும் சாக்லேட் தொட்டிக்குள் விழுந்ததும் முதலில் தகவல் தெரிவித்தவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்று தெரிவித்தனர். 


மார்ஸ் ரிக்லி நிறுவனம் : 


மார்ஸ் ரிக்லி நிறுவனம் ஒரு அமெரிக்க, குடும்பத்திற்கு சொந்தமான, பன்னாட்டு மிட்டாய் மற்றும் செல்லப்பிராணி உணவு உற்பத்தியாளர் நிறுவனம் ஆகும். விபத்து நடந்த எலிசபெத்டவுன் இடம் உட்பட, அமெரிக்காவில் 22 உற்பத்தி நிறுவனங்கள் இருந்து வருகிறது. நிறுவனம் M&M's, Snickers மற்றும் Twix போன்ற இனிப்புகளுக்கு இவை மிகவும் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண