பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தன் தந்தையும் பேட்மிண்டன் வீரருமான பிரகாஷ் படுகோன் உடன் இன்று (ஜூன்.10) திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்துள்ளார்.


பாலிவுட் குயின்




கர்நாடகாவை பூர்விகமாகக் கொண்ட தீபிகா படுகோன் 2007-ஆம் ஆண்டு வெளியான ’ஓம் சாந்தி ஓம்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தன் முதல் படத்திலேயே பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் அறிமுகமான தீபிகா படுகோன் 15 ஆண்டுகளாக பாலிவுட்டின் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.






பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை 2018ஆம் ஆண்டு திருமணம் செய்த தீபிகா, தன் சொந்த ஊரான கர்நாடகா வருவதையும், தென்னிந்திய மாநிலங்களில் உள்ள கோயில்களில் தரிசனம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.


தந்தை பிறந்த நாள்


அந்த வகையில், முன்னதாக தன் தந்தை பிரகாஷ் படுகோனின் 67-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தீபிகா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார்.






இந்த ஆண்டு கான்ஸ் திரைப்பட விழாவில் முன்னதாக தீபிகா பங்கேற்றுத் திரும்பிய நிலையில், அவர் நடிப்பில் பதான், லால் சிங் சத்தா, கபி ஈத் கபி தீவாளி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன.


நயன்தாரா திருப்பதி விசிட்


திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா - விக்னேஷ் சிவனும் முன்னதாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வருகை தந்த நிலையில் தற்போது நடிகை தீபிகா படுகோனும் திருப்பதி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.