சீனாவின் டான்டாங் நகரத்தில் உள்ள அதிகாரிகள் மக்களிடம் வீட்டு ஜன்னல்களை மூடி வைத்திருப்பதன் மூலமாக, வட கொரியாவில் இருந்து வரும் காற்றில் பரவும் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்கலாம் எனக் கூறியுள்ளனர். வட கொரியாவுக்கும், சீன நகரம் டாண்டாங்கிற்கும் இடையில் சுமார் 100 மீட்டர் அகலத்திற்கு நதி மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டுகளில் இந்த நகரம் கொரோனா தொற்றால் பெரியளவில் பாதிக்கப்படவில்லை எனினும் தற்போது அங்கு கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதி நிர்வாகம் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. திடீரென அதிகரித்துள்ள கொரோனா தொற்றின் காரணம் குறித்து அறிய முடியாததால், யேல் நதியின் கரையோரம் வசிக்கும் மக்கள் ஜன்னல்களை மூடி வைக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீண்ட தூரத்திற்கு காற்று வழியாக கொரோனா வைரஸ் பரவும் என நிர்வாகிகள் கூறியுள்ள நாட்டின் பொது சுகாதார அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுகுறித்து ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரம் குறித்த ஆய்வாளர் லியோ பூன், `கொரோனா வைரஸ் இவ்வளவு தூரம் பயணிக்கும் என நான் இதுவரை கேள்விப்பட்டது இல்லை’ எனக் கூறியுள்ளார். ஜப்பான் நாட்டின் மருத்துவர் டோஷிகாசு அபே, `கொரோனா தொற்றால் பெரிய ஜிம்களில் பரவ முடியும்.. கிராமங்களைத் தாண்ட முடியுமா என்றால் முடியாது என்றே கூறுவேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று ஏற்பட்டது முதல் சீனா அரசு கொரோனா இல்லாத சூழலை உருவாக்கும் உத்திகளைப் பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது. இது சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அடையாளத் திட்டங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
சமீபத்தில் சீன அதிகாரிகள் தங்கள் உத்திகளை இரட்டிப்பாக்கியுள்ளதோடு, அது உயிர்களைக் காப்பதாகவும், கொரோனாவில் இருந்து முழுமையாக விடுதலை பெற முடியாது என விமர்சிப்போருக்கு எச்சரிக்கை விடுத்தும் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளாக சீன அரசு இந்த ஆண்டு சுமார் 52 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் பரிசோதனை கூடங்கள், புதிய மருத்துவ வசதிகள், மருத்துவ உபகரணங்கள் முதலானவற்றில் முதலீடு செய்வதன் மூலமாக சுமார் 3 ஆயிரம் நிறுவனங்கள் வளர்ச்சியடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்