உலகம் முழுவதும் ஒரு சில நபர்கள் தங்களை உலகம் உற்றுநோக்க வேண்டும் என்ற காரணத்திற்காக வித்தியாசமான முயற்சிகளை செய்து வருகின்றனர். அதிலும்,  தன்னை தானே திருமணம் செய்து கொள்ளுதல் போன்ற வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 


இந்த நிலையில், தைவான் நாட்டில் வசித்து வரும் ஒரு நபர் அவசர மருத்துவ உதவி வேண்டும் என்று ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். உயிர் சம்மந்தப்பட்ட விஷயம் என்ற காரணத்தினால் ஆம்புலன்ஸ் டிரைவர் வேகமாக சென்று அவரை வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். 


மேலும் படிக்க :இரண்டாம் முறையாக செக்ஸ் பொம்மையை திருமணம் செய்த பாடிபில்டர்: அடுத்த ஹனிமூனுக்கு இதோ தயார்!


வேகமாக பறந்த அந்த வாகனம் விரைந்து மருத்துவமனைக்கு சென்றபோது, அந்த நபர் எந்த ஒரு பதற்றம் இன்றி கூலாக இறங்கி தனது வீட்டை நோக்கி சென்றுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆம்புலன்ஸ் டிரைவர் அந்த நபரை தடுத்து காரணம் கேட்டுள்ளார். இதற்கு அந்த நபர் சரியான விளக்கம் தர மறுத்துள்ளார். 


இதையடுத்து, ஆம்புலன்ஸ் டிரைவர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவரது பெயர் வாங்க் என்றும், குறிப்பிட்ட அந்த மருத்துவமனையில் இருந்து தனது இல்லம் வெறும் 200 மீட்டர் தூரம் தான் என்பதால் வேறு இடத்தில் இருந்து தனது வீட்டிற்கு வேகமாக வரவேண்டும் என்ற காரணத்திற்காக அவசர ஊர்தியை பயன்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். 


Tamil Nadu Covid-19 data tracker: தமிழ்நாட்டில் 736 பேருக்கு கொரோனா தொற்று; 9 பேர் உயிரிழப்பு!


இதேபோல், வாங்க் அவரச ஊர்தியான ஆம்புலன்ஸை பயன்படுத்தி 39 முறை பயணம் செய்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, காவல்துறையினர் மீண்டும் இதுபோல் செய்தால் அபராதம் கட்ட வேண்டி இருக்கும் என எச்சரித்து அனுப்பியுள்ளனர். தைவான் நாட்டில் ஆம்புலன்ஸ் சேவை அனைவருக்கும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ஜுனியர் உலகக்கோப்பை ஹாக்கி: காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா...காத்திருக்கும் கடும் சவால்


Watch Video| ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்.. Zoho CEO பதிவிட்ட பாம்பு டான்ஸ்..


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


தொடர்ந்து சொதப்பும் ரஹானே...வாய்ப்புக்காக வரிசையில் நிற்கும் வீரர்கள்...என்ன செய்யப்போகிறது இந்தியா?


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண