நமது சோலார் குடும்பத்தைத் தாண்டிய கிரகங்கள், நட்சத்திரங்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்து கொண்டிருக்கிறது. அதன்படி, ஆராய்ச்சியாளர்கள் அதிசயமான கண்டுபிடிப்பு ஒன்றைக் கண்டடைந்துள்ளார்கள். ஹாட் ஜுபிட்டர்ஸ் என்பது வாயுக்களால் நிரப்பப்பட்ட பிரம்மாண்ட பந்துகள் ஆகும். ஆச்சரியப்படும் வகையில், இவற்றின் நட்சத்திரத்தை சுற்றி வர இவற்றுக்கு மிகக் குறைந்த நேரமே ஆகிறது, அதாவது சில ஜுபிட்டர்ஸுக்கு பத்து நாட்களுக்கும் குறைவான தினங்கள். இதைப் போன்று 400 ஹாட் ஜுபிட்டர்ஸ்-ஐ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இப்போது மகா பிரம்மாண்டமான ஹாட் ஜுபிட்டர் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனுடைய வட்டப்பாதை இதுவரை நாம் பார்த்த ஹாட் ஜுபிட்டர்ஸின் வட்டப்பதைகளை விட மிகக் குறுகியது. அதனால், இது தனது வட்டப்பாதையை சுற்றி முடிக்க வெறும் 16 மணி நேரமே எடுத்துக்கொள்கிறது. அதாவது, நமது ஒரு வருடம் இந்த கிரகத்தில், வெறும் 16 மணிநேரம் தான்.
இது குறுகிய வட்டப்பாதையைக் கொண்டிருப்பதனாலும் தனது நட்சத்திரத்திற்கு மிக நெருக்கத்தில் அமைந்திருப்பதனாலும் பகல் நேரத்தில், இதன் வெப்ப நிலை 3500 கெல்வினைத் தொடுகிறது. அதாவது, 6000 டிகிரி ஃபாரன்ஹீட்! ஒரு சிறிய நட்சத்திரத்தின் வெப்ப நிலைக்கு சமமான வெப்பம்.
இதனுடைய தன்மைகளை ஆராயும்போது, ஆராய்ச்சியாளர்கள் இன்னொரு தகவலையும் கண்டறிந்துள்ளனர். TOI-2109b என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கிரகம் ‘வட்டப்பாதை சிதைவு’ என்னும் நிகழ்வுக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறது. அதாவது, தனது நட்சிதிரத்திற்குள் விழுந்து அமிழ்ந்து போவது தான் இந்த நிகழ்வு. இதனுடைய வட்டப்பாதை மிகக் குறுகியதாக இருப்பதனால் மற்ற ஹாட் ஜுபிட்டர்ஸ்-ஐ விட இதனுடைய சிதைவு வேகமாக இருக்கிறது.
நாசாவின் செயற்கைக்கோளால் (TESS – Transiting Exoplanet Survey Satellite ) நமக்குத் தெரியவந்திருக்கும் இந்த கிரகம் இன்னும் பத்து மில்லியன் ஆண்டுகளில் காணாமல் போயிருக்கும்.
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்