சமூக வலைதளங்களில் விலங்குகள் தொடர்பாக வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக இந்த மாதிரி வீடியோக்களை பிரபலங்கள் சிலர் பகிர்ந்தால் அந்த வீடியோ நிச்சயம் வைரலாகும். அந்தவகையில் தற்போது சோஹா குழுமத்தின் தலைவர் ஶ்ரீதர் வேம்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. 


இது தொடர்பாக அவர் கடந்த 26ஆம் தேதி ட்விட்டரில் பதிவு ஒன்று செய்திருந்தார். அதில்,”தென்காசியில் மழையின் போது இரண்டு நாகங்கள் இணைந்து நடனம் ஆடுகின்றன. இதை நடைபயிற்சி சென்ற போது படம் எடுத்து அனுப்பிய என் நண்பருக்கு நன்றி ” எனப் பதிவிட்டிருந்தார். அத்துடன் அந்த வீடியோவையும் பகிர்ந்து இருந்தார். இந்த வீடியோவை தற்போது வரை சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். 






அத்துடன் பலரும் இந்த வீடியோ தொடர்பாக தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 


















மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொட


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: அச்சுறுத்தும் கனமழை..சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..