விண்வெளியிலிருந்து பூமியின் புகைப்படம் 75 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா..? தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத காலத்தில் கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படம் ஒரு முக்கிய மைல்கல்லாக இருந்தது.விண்வெளியிலிருந்து பூமியின் முதல் புகைப்படம் 1946ஆம் ஆண்டு  அக்டோபர் 24ஆம் தேதி நாசி ராக்கெட்டால் முதன்முதலாக படமெடுக்கப்பட்டது. பூமியின் மேற்பரப்பில் ஒரு சிறிய பகுதியில் மேகங்கள் சூழ்ந்து இருப்பதையும், பின்னணியில் கறுப்பு இடமாகவும் அந்த புகைப்படம் காட்டுகிறது. 




இதுநாள் வரையில்  9,00,000க்கும் அதிகமான புகைப்படங்கள் நாசா விஞ்ஞானிகளால் எடுக்கப்பட்டுள்ளன. ரொனால்டு இவன்ஸ் 1972ம் ஆண்டு பூமியின் ‘புளூ மார்பிள்’ புகைப்படத்தை எடுப்பதற்கு முன்பே நாசி ராக்கெட் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளது. புளூ மார்பிள்' என்பது, டிசம்பர் 7, 1972 அன்று சந்திரனை நோக்கிச் செல்லும் வழியில் அப்பல்லோ 17 விண்கலத்தின் குழுவினரால்  சுமார் 29,000 கிமீ தொலைவில் எடுக்கப்பட்ட பூமியின் புகழ்பெற்ற புகைப்படம் என்பது குறிப்பிடதக்கது. 


எப்படி எடுக்கப்பட்டது அந்த புகைப்படம்? 
நாசி V-2 ராக்கெட்டின் எரிபொருள் டேங்க்குகளுக்கு இடையில் பொருத்தப்பட்ட 35 மிமீ திரைப்பட கேமரா விண்வெளியில் இருந்து பூமியின் முதல் படத்தை எடுத்துள்ளது. முன்னதாக நியூ மெக்சிகோவின் ஒயிட் சாண்ட்ஸ் ஏவுகணை வீச்சில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இதையும் படிக்க: 


Watch Video | காட்டாறு வெள்ளத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய தாய்.. சேலத்தில் பதைபதைக்க வைக்கும் வீடியோ


‘சிறிய அளவில் போதைப்பொருள் பயன்படுத்துவதை குற்றமாகக் கருதக்கூடாது': பரிந்துரை வழங்கிய சமூக நீதி அமைச்சகம்
 V-2 ராக்கெட்டின் 12வது  முறையாக அக்டோபர் 1946ஆம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி ஏவப்பட்டது. அப்போது ராக்கெட் 65 மைல் உயரத்திற்கு பறந்தது. புகைப்படங்களை டைம் லேப்ஸ் புகைப்படங்களாக எடுத்தது.
உலகின் முதல் திரவ எரிபொருள் ராக்கெட்டுகள் அமெரிக்க இயற்பியலாளர் ராபர்ட் கோடார்ட்டால் 1920களில் ஏவப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போதுதான் ஜெர்மனியர்கள் தங்கள் V-2 ராக்கெட் மூலம் ராக்கெட் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நிலையில் இருப்பது உலகுக்கு தெரிய வந்தது. 


நாசி ராக்கெட்டுகள் நாசா ராக்கெட் ஏவுதலுக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண