துருக்கியில் நடுவானில் பாராகிளைடிங்கில் ஈடுபட்ட வீரர்கள் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து அவர்கள் கடலில் விழும் பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன. 


துருக்கியில் ஏர் கேம்ஸ் விழா நேற்று நடைபெற்றது. ஒலிம்பிக் போன்றே பாராசூட், ஸ்கை டைவிங், பாரா கிளைடிங் போன்றவை இவ்விழாவில் இடம்பெறும். இந்நிலையில் நடுவானில் பாராகிளைடிங்கில் ஈடுபட்ட 2 வீரர்கள் எதிர்பாராதவிதமாக நடுவானில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து இருவரும் நிலைத் தடுமாறி அதிவேகமாக கடலில் விழுந்தனர். இதை வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் அதிர்ச்சியில் உறைந்தனர். 




இதையடுத்து இருவரையும் கடலிலிருந்து மீட்ட மீட்புப் படையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இந்நிலையில் இருவரின் நிலைக் குறித்தும் இன்னும் சரியான தகவல்கள் வெளியாகவில்லை. இது தொடர்பான காட்சியை அங்குள்ள உள்ளூர் செய்தி நிறுவனம் வீடியோவாக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து பதிவிட்டுள்ள பலரும், மிகவும் சோகமான சம்பவம் என்றும்., இந்த வீடியோ அதிர்ச்சியை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்







துருக்கியின் ஒலுடெனிசில் நடைபெறும் பாராகிளைடிங் மிகுந்த பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில்  சுமார் 60 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் கலந்துக் கொண்டனர். அங்குதான் தற்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.


Watch Video | போப்பாண்டவரின் தொப்பியையே தூக்கிய குட்டிச் சிறுவன்.. வைரலாகும் வீடியோ


அதே போல இன்னொரு நிகழ்வில், உக்ரேனை சேர்ந்த ஒரு பெண் பேராகிளைடிங்கில் ஈடுபட்டபோது, நீருக்குள் விழுந்தார். கடலோர படையினரால் உடனடியாக மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண