தலிபான் நிறுவனர் மறைந்த முல்லா ஒமரின் கார், பூமிக்குள் இருந்து 20 ஆண்டுகளுக்குப் பின் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
முல்லா ஒமர்
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான் அமைப்பை தோற்றுவித்த முல்லா ஒமர், அந்நாட்டு அரசுக்கு எதிராக போரில் ஈடுபட்டார். தொடர்ந்து, உள்நாட்டுப் போரில் வென்ற தலிபான்கள், 1996ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தனர்.
தொடர்ந்து அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை அல் - குவைதா பயங்கரவாதிகள் தகர்த்த நிலையில், ஆப்கன் மீது போர் தொடுத்த அமெரிக்கா, தலிபான் அரசை நீக்கிவிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசை ஆட்சியில் அமர்த்தியது.
மேலும் படிக்க: Afghanistan quake: ''எல்லாரும் எங்க போய்ட்டீங்க?'' - நிலநடுக்கத்தில் பலியான ஓனரின் குடும்பத்தை தேடி அலையும் நாய்!
டொயோட்டா கார்
இதனையடுத்து கடந்த ஆண்டு ஆப்கனில் மீண்டும் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இந்தச் சம்பவங்களுக்கிடையே தலிபான் நிறுவனரான முல்லா ஒமர், 2013ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
இதனிடையே தலிபான்கள் மீது அமெரிக்கா போர் தொடுத்த 2001ஆம் ஆண்டு, வெள்ளை நிற டொயோட்டா குவாலிஸ் காரில், முல்லா ஒமர் தப்பிக்க முயற்சித்தார். ஆனால் அமெரிக்கப் படையினர் தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அவரால் காரில் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
தோண்டியெடுத்த தலிபான்கள்
எனவே, முல்லா ஒமரின் காரை, தலிபான் படையைச் சேர்ந்த அப்துல் ஜபார் ஒமாரி என்பவர், ஸாபூல் மாகாணத்தில் உள்ள தன் தோட்டத்தில், பூமிக்கு அடியில் மண்ணில் புதைத்து வைத்தார். தற்போது, அந்தக் காரை அவர் பூமிக்கு அடியில் இருந்து மீண்டும் வெளியே எடுத்துள்ளார்.
அந்தக் கார் அதிக சேதமின்றி அப்படியே இருப்பதாகவும், அதை ஆப்கனின் தேசிய அருங்காட்சியகத்தில், மக்கள் பார்வைக்கு வைக்கப் போவதாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: Sri Lanka's Tea production risk: இலங்கையில் தேயிலை உற்பத்தி துறை வீழ்ச்சி அடையும் அபாயம்; 10 லட்சம் பேர் வேலையிழக்க வாய்ப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்