Flying Hotel Concept: ஐந்தாயிரம் பேருடன் வானில் பறக்கும் பைவ் ஸ்டார் ஹோட்டல்! வாயை பிளக்க வைக்கும் வாவ் கான்செப்ட்!

இந்தப் பறக்கும் ஹோட்டலில் 5000 பேர் தங்கலாம். நீச்சல் குளம், ஷாப்பிங் மால் உள்ளிட்ட பல வசதிகள் இருக்கின்றன.

Continues below advertisement

மனிதனுக்கு தொழில்நுட்பம் அறிமுகமானதில் தொடங்கி அதன் வளர்ச்சி அபரிதமானது. போக்குவரத்திற்கு சக்கரத்திலிருந்து உருவாக்கப்பட்ட இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பிறகு வானில் பறக்கும் அளவுக்கு உயர்ந்தது. தொழில்நுட்பத்தை கொண்டு மனிதன் நிகழாது என்பவைகளையும், கற்பனைகளையும் சாத்தியமாக்கி வருவதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றனர்.

Continues below advertisement

தொழில்நுட்பத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சி, பறக்கும் ஹோட்டல்.. (flying hotel concept) ’Sky Cruise’ என்று பெயரிப்பட்ட திட்டம் எதிர்வரும் காலத்தில் எப்போதாவது முழுவடிவம் பெற்று நிஜமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானம் நவீன வசதிகளுடன் சொகுசு ஹோட்டலாக இருந்தால் எப்படி இருக்கும்? அதற்கான வடிவமைப்பை உருவாக்கி அசத்தியிருக்கிறார் Hashem Al-Ghaili.


Sky Cruise:

ஏமன் நாட்டைச் சேர்ந்த Hashem Al-Ghaili  என்பவர் (video producer and science communicator)  சமீபத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இது ஹசீம்-அல்-காய்லி இந்த பறக்கும் ஹோட்டலை ஒன்றைப் பார்த்து பிரமித்து அதிலிருந்து மாற்றி வடிவமைத்துள்ளார். 

’Futuristic’ என்ற வார்த்தைக்கு பொருந்து இந்த கான்ஸப்ட். அதாவது வான் மேகங்களுக்கு நடுவில் ஒரு வாரம் தங்கியிருந்தால் எப்படி இருக்கும்? அதுவும் உணவு உள்ளிட்ட பூமியில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் வானில் கிடைத்தால் ஒரு வாரம் என்ன, எப்போதும் அங்கேயே தங்கிவிடலாமென தோன்றும். அப்படிதான் இருக்கிறது ஹசீமின் விடீயோ காட்சிகள். 


விமானம் போன்ற ஹோட்டல். உள்ளே, உணவு, ஷாப்பிங், பொழுதுப்போக்கிற்கான வசதிகள் உள்ளிட்டவைகள் இருக்கும். இந்த பறக்கும் ஹோட்டல் நியூக்ளியர் (அணு ஆற்றல்) திறன் கொண்டு இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

என்னென்ன வசதிகள்:

இந்தப் பறக்கும் கப்பலில் 5000 பேர் ரொம்ப நாட்களுக்கு அங்கேயே தங்கியிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது விமான வடிவில் இருந்தாலும், அதற்குள் தனித்தனி அறைகள் இருக்கும். ஹோட்டல் எப்படி இருக்குமோ அதேபோலவே, ஒரு பெரிய லாங் அமைப்படும்; அதில் நின்று கொண்டு வானத்தை ரசிக்கலாம்.

இதில் ஹாப்பிங் மால், ஜிம், நீச்சல் குளம், சினிமா தியேட்டர்கள்,  உணவகங்கள், பார்ட்டி ஹால்,  உள்ளிட்ட பல நவீன வசதிகளுடன் இருக்கும்.

மேலும், இந்த ஹோட்டலில் தங்குபவர்களுக்கு, எலக்ட்ரிக் ஜெட் சேவையும் வழங்கப்படும். எலக்ட்ரிக் ஜெட் மூலம் உலகின் எங்கு வேண்டுமானாலும் சென்றுவிட்டு திரும்ப இந்த ஹோட்டலுக்கு வரலாம்.


இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த பறக்கும் ஹோட்டலை இயக்கும் விமானி (பைலட்) கிடையாது. இதற்கு Artificial Intelligence மூலம் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அணு ஆற்றல் மூலம் செயல்படுவதால், இதற்கு எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் நிலை வரும் வாய்ப்புகள் இல்லை. 


சரி, இது எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று ஆவல் அதிகரிக்கிறதா? இது பறக்கும் ஹோட்டலுக்கான திட்டம் மட்டுமே. இன்னும் வடிவமைப்பதற்கான பணிகள் தொடங்கவில்லை. இது ஒரு மேப் மட்டுமே.

முழு விடீயோவை காண...

 

Continues below advertisement
Sponsored Links by Taboola