Slovakia Prime Minister Gun Attack: ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு:
ஸ்லோவாகியா நாட்டின் பிரதமராக ராபர்ட் ஃபிகோ என்பவர் பதவி வகித்து வருகிறார். இவர், இன்று அரசு ரீதியான கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய நிலையில், அவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில், அவர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் AP மற்றும் Reuters செய்தி முகமைகள் தெரிவித்துள்ளன.
மேலும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார், எந்த காரணத்துக்காக தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறித்தான தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. தாக்குதல் குறித்து, ஸ்லோவாகியா பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சர்வதேச தகவல்கள்:
இச்சம்பவம் குறித்து சர்வதேச செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது, ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது, புதன்கிழமை தினத்தன்று, ஸ்லோவாகியா தலைநகரில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் வடகிழக்கில் உள்ள ஹன்ட்லோவா என்ற பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவித்தன.
மேலும் துப்பாக்கி சூட்டின்போது, நான்கு துப்பாக்கி குண்டுகள் சுடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், சுடப்பட்ட 4 குண்டுகளில் ஒரு குண்டு பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஹன்ட்லோவாவில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துமனைக்கு அழைத்து செல்கையில், ஃபிகோ சுயநினைவுடன் இருந்தார் என்றும், அங்கு அவருக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் சர்வதேச செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Also Read: Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Also Read: மாலத்தீவிலிருந்து வெளியேறிய இந்திய ராணுவம்! இந்தியாவில் மாலத்தீவு அமைச்சர் - என்ன நடக்கிறது?