கருந்துளையானது எப்படி இருக்கும், அதன் மேலே பறந்து காட்சிப்படுத்துவது போன்ற வீடியோவை உருவாக்கி நாசா வெளியிட்டுள்ளது.
கருந்துளை:
விண்வெளி தொடர்பாக அறிவியலாளர்கள் பேசுகையில், பலரும் கருந்துளை குறித்து பேசுவதை பற்றி கேட்டிருப்போம். ஆனால், நமக்கு கருந்துளை எப்படி இருக்கும் என்பது தெரியாது. நாம் கருந்துளையை பார்த்ததில்லை. கருந்துளையை பார்க்கவும் முடியாது. ஏனென்றால் கருந்துளையை காணவும் முடியாது. ஏன் கருந்துளையை பார்க்க முடியாது என்பதால், அது இருள் சூழ்ந்ததாக இருக்கும். கருந்துளையை சுற்றியுள்ள பொருட்களின் தாக்கத்தை வைத்துதான் கருந்துளையை அறிய முடியும் என கூறப்படுகிறது.
கருந்துளை என்பது மிகப்பெரிய அண்ட வெளியில் காணப்படும் சக்தி வாய்ந்த கண்ணுக்கு தெரியாத பகுதியாகும். இந்த கருந்துளை அதிக ஈர்ப்பு விசை கொண்டது, எந்த அளவுக்கு ஈர்ப்பு சக்தி என்றால் , இதனை கடந்து செல்லும் எந்த ஒரு ஒளியாக இருந்தாலும் அதைகூட தனக்குள் ஈர்த்துக் கொள்ளும் அளவுக்கு சக்தி வாய்ந்தது.
இது ஒரு சூரியனையே தனக்குள் ஈர்த்து கொள்ளும் அளவுக்கு சக்தி வாய்ந்தது என கூறப்படுகிறது. இந்த கருந்துளையானது அதனுள் சென்ற சிறிய ஒளியை கூட வெளியே வர விடாது, அந்த அளவுக்கு மிகவும் சக்திவாய்ந்தது. நமது பால்வெளியின் அருகில் உள்ள ஒரு கருந்துளை நமது சூரியனை விட 40 லட்ச மடங்கு பெரியதாக இருக்கும் .
இந்நிலையில், கருந்துளை எப்படி இருக்கும் என்பது போன்ற மாதிரி வீடியோவை, சூப்பர் கம்பியூட்டர் மூலம் உருவாக்கி நாசா வெளியிட்டுள்ளது.
நாசா வெளியிட்ட வீடியோ:
இந்நிலையில், கருந்துளை எப்படி இருக்கும் என்பது போன்ற மாதிரி வீடியோவை, சூப்பர் கம்பியூட்டர் மூலம் உருவாக்கி நாசா வெளியூட்டுள்ளது. , யூடியூப் வீடியோவை கிளிக் செய்து பார்த்தால், அதன் ஆச்சர்யத்தை கண்டு களிக்கலாம்.
Also Read:International Space Station: சென்னைக்கு மேலே பறந்த சர்வதேச விண்வெளி நிலையம்: வைரலாகும் புகைப்படங்கள்