✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

மாலத்தீவிலிருந்து வெளியேறிய இந்திய ராணுவம்! இந்தியாவில் மாலத்தீவு அமைச்சர் - என்ன நடக்கிறது?

செல்வகுமார்   |  10 May 2024 09:03 PM (IST)

India Withdraws Soldiers From Maldives: மாலத்தீவிலிருந்து இந்திய பாதுகாப்பு படை முழுவதுமாக வெளியேறிவிட்டதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மாலத்தீவிலிருந்த வெளியேறிய இந்திய ராணுவத்தினர்; image credits: @getty images

மாலத்தீவு அதிபர் , தனது நாட்டிலிருந்து இந்திய ராணுவ வீரர்களை திரும்பப் பெற உத்தரவு பிறப்பித்த நிலையில், அனைவரும் திரும்ப பெற பெறப்பட்டுள்ளனர். 

மாலத்தீவிலிருந்து வெளியேறிய இந்திய ராணுவத்தினர்:

சீனாவுக்கு ஆதரவான தலைவராக கருதப்படும் தற்போதைய மாலத்தீவின் அதிபர் முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான தலைவராகவும் பார்க்கப்படுகிறார். இவர் மாலத்தீவு நாட்டில் இருந்த சுமார் 90 இந்திய ராணுவ வீரர்களை திருப்பி அனுப்புவது குறித்து, கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது முய்சு தெரிவித்திருந்தார்.  

அதையடுத்து, அதிபர் தேர்தலில் முய்சு வெற்றி பெற்றதையடுத்து, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்களை முழுமையாக திரும்பப் பெறுமாறு இந்தியாவிடம் தெரிவித்தார்.  மேலும் அதற்கான காலக்கெடுவாக மே 10ஆம் தேதியை நிர்ணயித்திருந்தார். இந்நிலையில் காலக்கெடுவானது, இன்றைய தினமான மே 10வுடன் முடிவடையும் நிலையில்,  இந்தியா தனது வீரர்கள் அனைவரையும் திரும்பப் பெற்றுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 என்ன பிரச்னை?:

இந்தியா மாலத்தீவுக்கிடையேயான அயல்நாட்டு உறவானது, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு பதவியேற்ற நிலையில் இருந்து சற்று விரிசலுடனே இருப்பதை காண முடிகிறது.  முய்சு, பதவியேற்றதிலிருந்து இந்தியாவுடன் சற்று விலகியே இருக்கிறார். மேலும் , இவர் சீனாவுடன் நெருக்கமாகவும் இருப்பதை பார்க்க முடிகிறது. 

படம்: மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, பிரதமர் மோடி ; image credits: @ANI

இதற்கு உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், மாலத்தீவு அதிபர்கள் பதவியேற்றவுடன் , இந்தியாவுக்கு வருவது வழக்கம். ஆனால் முய்சு சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார்.  அதுமட்டுமின்றி , பிரதமர் மோடி லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு அதிகாரிகளின் எதிர்மறையான விமர்சனங்களை வைத்தனர். இது, இந்தியாவில் பெரும் சர்ச்சையான நிலையில், பலரும் மாலத்தீவை புறக்கணிப்போம் என முழக்கங்களை  வைத்தனர். இதையடுத்து , மாலத்தீவுக்கு வரும் சுற்றுலா பயணிகளில் 2வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 5வது இடத்தில் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் மாலத்தீவின் முக்கிய வருவாயாகவும், முக்கிய அயல்நாட்டு செலவாணியாகவு சுற்றுலாத்துறை இருந்து வருகிறது.

மாலத்தீவு அமைச்சர் இந்தியா வருகை:

இந்நிலையில், இந்தியர்களின் புறக்கணிப்பு, மாலத்தீவுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தியது.  இந்நிலையில், மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீர், டெல்லிக்கு வருகை தந்துள்ளார். இவர் பயணத்துக்கு முன்பாக, மாலத்தீவு சுற்றுலா துறை அமைச்சர் இப்ராஹீம் தெரிவித்ததாவது, இந்தியர்கள் மாலத்தீவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும் , தெரிவித்ததாவது, இந்தியா – மாலத்தீவுக்கிடையேயான உறவானது மிகுந்த பாரம்பரியம் உண்டு. தற்போது போலவே, முன்பும் மாலத்தீவுக்கு இந்தியா உதவி செய்துள்ளது. இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். 

இந்நிலையில், தற்போது மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சரின் வருகையானது, இருநாட்டு உறவுகளிடையே நேர்மறையாக பார்க்கப்பட்டாலும்,  மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை இந்தியா திரும்ப பெற்றுள்ளது மற்றும் அதிபர் முய்சுவின் இந்தியாவுக்கு எதிரான போக்கு உள்ளிட்டவைகளால் இரு நாடுகளுக்கிடையேயான உறவை நேர்மறையாக கொண்டு செல்வது மிக கடினம் என்றே பார்க்கப்படுகிறது.  

Published at: 10 May 2024 09:03 PM (IST)
Tags: soldiers Maldives INDIA
  • முகப்பு
  • செய்திகள்
  • உலகம்
  • மாலத்தீவிலிருந்து வெளியேறிய இந்திய ராணுவம்! இந்தியாவில் மாலத்தீவு அமைச்சர் - என்ன நடக்கிறது?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.