சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
சிங்கப்பூர் அதிபர் தேர்தல்
சிங்கப்பூர் அதிபரான ஹலிமா யாக்கோப் பதவிக்காலம் வரும் செப்டம்பr-13 ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், வரும் அதிபர் தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. ஹலிமா எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
தர்மன் சண்முகரத்தினம் அதிபர் தேர்தலில் போட்டி
ஹலிமா யாக்கோப் அமைச்சரவையில் ( People's Action Party) மூத்த அமைச்சராக உள்ள தர்மன் சண்முகரத்தினம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதிபா் தோ்தலில் போட்டியிடுவதற்கான ஆதரவு சில மாதங்களாக சிங்கப்பூா் மக்களிடையே அதிகரித்துவருகிறது என்றும் அதிபா் தோ்தலில் போட்டியிடுவது என்ற கடினமான முடிவை கவனமாக எடுத்துள்ளேன் என்று தா்மன் ஷண்முகரத்தினம் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.
யார் இந்த சண்முகரத்தினம்?
தர்மன் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் ’Kennedy School of Government.’ உள்ளிட்ட பல் முக்கிய கல்வி நிறுவனங்களில் கல்வி பெற்றுள்ளார். பொருளாதார பட்டதாரியான தா்மன் சண்முகரத்தினம் அரசு வங்கியில் பணியைத் தொடங்கினாா். சிங்கப்பூா் நிதி ஆணையத்தின் தலைவராக பதவி வகித்துள்ளாா். துணைப் பிரதமராகவும், நிதி அமைச்சா், கல்வி அமைச்சராகவும் பதவி வகித்துள்ள அவா், 2019 மே முதல் ஒருங்கிணைப்புத் துறை அமைச்சராக உள்ளாா்.
பொருளாதார திட்டங்களில் பிரதமருக்கு பல்வேறு ஆலோசனைகளை அரசிற்கு இவர் வழங்கி வருகிறார். சா்வதேச நிதியம் மற்றும் நிதிக் குழுவின் ஆசியா பிரிவின் தலைவராக இருந்துள்ளாா்.
மேலும் வாசிக்க..