சிங்கப்பூரில் பாராளுமன்ற சபாநாயகரும், ஒரு பெண் எம்.பி.யும் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் ராஜினாமாவை பிரதமர் அலுவலகம் கடந்த திங்கள்கிழமை நேற்று அறிவித்தது.


சிங்கப்பூரில் பாராளுமன்ற சபாநாயகரும், ஒரு பெண் எம்.பி.யும் ராஜினாமா செய்துள்ளனர். திருமணத்தை மீறிய  உறவில் இருந்த விவகாரம்தொடர்பாக  அவர்கள் பதவி விலகி உள்ளனர். சபாநாயகர் டான் சுவான் ஜின்( 54) செங்லி ஹுய் (47) எம்.பி. ஆகியோரின் ராஜினாமாவை பிரதமர் லீ சியென் லூங் ஏற்றுக்கொண்டார்.


இதுதொடர்பாக பிரதமர் கூறும்போது, "மக்கள் செயல், கட்சியின் உயர்ந்த தகுதி மற்றும் தனிப்பட்ட நடத்தையை பேணுவதற்காக சபாநாயகர் மற்றும் எம்.பி.யின் ராஜினாமா ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் திருமணத்தை மீறிய உறவில் இருந்தனர். அதை கடந்த பிப்ரவரி மாதம் நிறுத்த சொன்ன பிறகும் அது நீடித்தது. இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு சபாநாயகரிடம் கூறினேன். ஆனாலும் அது தொடர்ந்தபடியே இருந்தது. இதனால் அவர்களது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டேன்” என்றார். டான் சுவான் ஜின் எழுதிய ராஜினாமா கடிதத்தில் தனது குடும்பத்தில் கவனம் செலுத்த அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க,


Reservation: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு; இந்த ஆண்டிலேயே அமல்படுத்த ஆளுநர் பரிந்துரை


Breaking News LIVE: பிரதமர் பதவியையோ, அதிகாரத்தையோ காங்கிரஸ் விரும்பவில்லை. மக்கள் நலனே முக்கியம் - பிரதமர் மோடி