Breaking News LIVE: அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நிறைவு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணியிடம் விசாரணை நிறைவடைந்தது. அமலாக்கத்துறை இன்று அமைச்சர் பொன்முடியிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், முன்னதாக விசாரணை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார்.
தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கெளதம சிகாமணி ஆகியோடு சொந்தமான இடங்களில் நேற்று நண்பகல் முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததாக புகாரின் பேரில் அவருக்குச் சொந்தமான 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பொன்முடி நேரில் ஆஜராகும் சம்மன் அனுப்பப்பட்டது. நுங்கப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் பொன்முடியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொன்முடி வீட்டிலிருந்து ரூ.81.7 லட்சம் மதிப்புள்ள பணம், ஆவணங்கள் பறிமுதல், ரூ.13 லட்சம் மதிப்புள்ள பிரிட்டிஷ் கரன்சி கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்காத் துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் வந்திருப்பது அளவற்ற மகிழ்ச்சி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் கூட்டணி இது என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க., த.ம.க., புதிய தமிழகம், ஐ.ஜே.கே., உள்ளிட்ட 36 கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கும் ஆலோசானைக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அரங்கிற்கு வந்தார் .
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.-வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடைபெற்று வரும் நிலையில், மூன்றாவது கூட்டம் மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எந்த தேதியில் மும்பையில் எதிர்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியால் எதிர்க்கட்சி கூட்டணியான I.N.D.I.A. - ஐ வீழ்த்த முடியுமா என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.
இரண்டாவது நாள் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு என்ன பெயர் வைப்பது குறித்து தலைவர்களிடையே ஆலோசனை நடைபெற்று வந்தது. அதன்படி, கூட்டணிக்கு இந்தியா (I-N-D-I-A) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி என பொருள்படும் அளவுக்கு பெயர் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 9 ஆண்டுகளில் பொருளாதாரத்தையும், ரயில்வே துறையையும் பாஜக சீரழித்து விட்டது. பாஜக ஆட்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
தேசத்தை காக்க பாஜகவுக்கு எதிராக அணி திரண்டுள்ளோம் என எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு - தேசத்தின் இருவேறு சித்தாந்தங்களுக்கு எதிரான போராட்டம் எனவும் சூளுரைத்துள்ளார்
2வது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு அமைச்சர் பொன்முடி, மகன் கௌதம சிகாமணி எம்.பி., ஆஜராகியுள்ளனர்
2வது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக செல்கிறார் அமைச்சர் பொன்முடி. அவருடன் மகனும், எம்.பி.யுமான கௌதம சிகாமணியும் செல்கிறார்.
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'INDIA'என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு
பாஜக ஆட்சியில் வெறுப்பு அரசியல் மட்டுமே பேசப்பட்டு வருகிறது. நாட்டின் ஜனநாயகம், சகோதரத்துவம், இறையாண்மையை காப்பாற்ற நாங்கள் இங்கு கூடியுள்ளோம் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
கருக்கலைப்புக்கு உரிய அனுமதி வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்க அரசு மத்துவமனைகளில் தனி வாரியம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாநில அளவில் எதிர்க்கட்சிகள் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தேச நலன் கருதி கூடியுள்ளோம் என கார்கே தெரிவித்துள்ளார்.
சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், நகரின் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை என தெரிவித்து உயர்நீதிமன்றம், ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.
அமைச்சர் பொன்முடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சரத்பவார் பெங்களூரு வருகை புரிந்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு: கைது நடவடிக்கை செல்லும் என்னும் மூன்றாம் நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு
இன்று மீண்டும் 4 மணிக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் பேட்டி
அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து விசாரணை நிறைவடைந்து புறப்பட்டார் பொன்முடி
நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை
அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார் அமைச்சர் பொன்முடி
நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அமைச்சர் பொன்முடியும், அவரது மகனும் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்
விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட அமைச்சர் பொன்முடி தனது சொந்த வாகனத்தில் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்
அமலாக்கத்துறையினரின் 13 மணிநேர சோதனைக்கு பின் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் அமைச்சர் பொன்முடி. விசாரணைக்கு பின் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்.ஜி சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன் : சமூகவலைதளங்களில் அவதூறாக பதிவிட்ட வழக்கில் பாஜக நிர்வாகி எஸ்.ஜி சூர்யாவுக்கு ஜாமீன்
2வது சுற்றுவட்டப்பாதைக்கு சந்திரயான் -3 விண்கலத்தை உயர்த்தும் முயற்சி வெற்றிபெற்றுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் உள்ள லாக்கர்களை உடைத்து அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு சென்றடைந்தார்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணையில் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ 11வது முறையாக வாய்தகேட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே சோதனை நடத்திவரும் நிலையில் தற்போது தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அமலாக்கத்துறை நடவடிக்கை பாகவிற்கு வீழ்ச்சியைத்தான் ஏற்படுத்தும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடியிடம் மனு கொடுக்க வந்த திமுக தொண்டர் ஒருவரின் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்திய அமலாக்கத்துறையினர் அதன் பின்னர் அவரை விடுவித்துள்ளனர்.
பாஜகவால் இந்தியாவுக்கே ஆபத்து வந்துள்ளது. ஆபத்தில் இருந்து இந்தியாவைக் காக்கவே எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது.
எதிர்க்கட்சிகளின் கவனத்தை திசை திருப்பவே அமலாக்கத்துறை ரெய்டுகள் நடைபெற்றுள்ளது. பாஜகவின் ஏவல்துறையாக அமலாக்கத்துறை செயல்படுகிறது என முதலமைச்சர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாஜகவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் அமலாக்கதுறை ரெய்டுகளை பாஜக நடத்துகிறது என முதலமைச்சர் கூறியுள்ளார்.
அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்பட்டு வரும் சோதனையில் அவரது கார் உள்பட மற்ற வாகனங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புறப்பட்டுள்ளார்.
அமலாக்கத்துறையை ஒரு அரசியல் பிரிவாக பாஜக பயன்படுத்துகிறது என காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள பழமையான கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திமுக அமைச்சர் பொன்முடி வீட்டருகே திமுக வழக்கறிஞர்கள் திரண்டுள்ளனர்.
குர்வாய் கெத்தோரா ஸ்டேஷனில் வந்தே பாரத் விரைவு ரயிலின் பெட்டிகளில் ஒன்றிl பேட்டரி பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்ததாக இந்திய ரயில்வே கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனி நடத்திவரும் நிலையில் தற்போது, அவரது மகன் கௌதம் சிகாமணி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
Background
Petrol Diesel Price: சென்னையில் மாற்றமின்றி தொடர்ந்து 13 மாதங்களை கடந்து விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரத்தைக் காணலாம்.
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (ஜூலை 17) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 422வது நாளாக தொடர்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -