புதுச்சேரியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு,  இந்த கல்வி ஆண்டிலேயே மருத்துவப் படிப்புகளில் 10% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் பரிந்துரை செய்துள்ளார். 


குறிப்பாக எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 10% இடஒதுக்கீடு வழங்கிட பரிசீலிக்குமாறு புதுச்சேரி முதலமைச்சருக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன்  பரிந்துரைத்துள்ளார்‌. இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த புதுச்சேரி  முதலமைச்சர் ரங்கசாமியும் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில் 2023- 24ஆம் கல்வி ஆண்டில் இருந்தே 10 சதவீத இட ஒதுக்கீடு, புதுச்சேரியில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு


தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின்கீழ் 20202ஆம் ஆண்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2021-ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின்கீழ், அனைத்துத் தொழில் படிப்புகளுக்கும் ஒதுக்கீடு விரிவுபடுத்தப்பட்டது. குறிப்பாக பொறியியல், வேளாண்மை,  கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 


இந்த ஒதுக்கீட்டின்கீழ் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு ஆகக் கூடிய செலவு, கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் அரசு ஏற்றுக் கொள்ளும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்.


2023- 24ஆம் கல்வி ஆண்டில் அமல்


இந்த நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு,  இந்த கல்வி ஆண்டிலேயே மருத்துவப் படிப்புகளில் 10% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் பரிந்துரை செய்துள்ளார். இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த புதுச்சேரி  முதலமைச்சர் ரங்கசாமியும் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில் 2023- 24ஆம் கல்வி ஆண்டில் இருந்தே 10 சதவீத இட ஒதுக்கீடு, புதுச்சேரியில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.