பிரான்சில் பால்கனியில் காபி குடித்து கொண்டிருந்த பெண்ணின் இடுப்பின் மீது திடீரென எரிகல் துண்டு ஒன்று விழுந்ததில் அவர் அதிர்ச்சி அடைந்தார். பாரீஸ், விண்ணில் பூமியை சுற்றி எரிகற்கள் தங்களது பாதையில் பயணித்து வருகின்றன. அவை சில சமயங்களில் உடைந்து, ஒரு சில பாகங்கள் பூமியில் வந்து விழுவதுண்டு. ஆனால், ஒரு சில எரிகற்கள் வரும் வழியிலேயே முற்றிலும் எரிந்து விடும்.



சில எரிகற்கள் பூமியின் நிலப்பரப்பில் வந்து விழுவதுண்டு. அவற்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் பெண் ஒருவர் தன் வீட்டு பால்கனியில் நின்று  நண்பருடன் பேசி கொண்டே, காபி குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அந்த பெண்ணின் இடுப்பு பகுதியில் மர்ம கல் ஒன்று வந்து விழுந்துள்ளது. இதுபற்றி அப்பெண், லெஸ் டெர்னியர்ஸ் நவெல்லஸ் டிஅல்சாஸ் என்ற அந்நாட்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “எங்கள் வீட்டு மேற்கூரை பகுதியில் இருந்து ஒரு பெரிய பூம் என்ற சத்தம் கேட்டது. ஒரு சில வினாடிகளில், எனது இடுப்பு பகுதியில் ஏதோ வந்து விழுந்ததை உணர்ந்தேன்.

விழுந்தது, ஒரு விலங்கு அல்லது வவ்வாலாக இருக்கும் என்று நினைத்தேன். அது சிமெண்ட் துண்டாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், அது என்னவென்று சரியாக தெரியவில்லை.  எனவே அது என்னவென்று அறிந்து கொள்வதற்காக, அந்த கல்லை எடுத்து கொண்டு மேற்கூரை அமைப்பவரிடம் சென்று கேட்டு உள்ளார். அவர், அது சிமெண்டால் ஆன பொருள் அல்ல என்றும் எரிகல் போன்று உள்ளதாகவும் கூறியுள்ளார்.


இதன்பின்னர், அப்பெண் அந்த பொருளை புவியியலாளரான தியர்ரி ரெப்மேன்னிடம்  எடுத்துச் சென்று உள்ளார். அவர் அது வேற்றுகிரக பொருள் என உறுதிப்படுத்தி உள்ளார். அதில், இரும்பு மற்றும் சிலிகான் உள்ளிட்ட கலவை இருந்து உள்ளது. இது ஒன்றும் அரிது அல்ல. இருந்த போதிலும் மனிதர்கள் மீது எரிகல் விழுவது என்பது மிக அரிதான நிகழ்வு  என ரெப்மேன் அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.  நாள்தோறும் பூமியில் 50 டன் எரிகல் பொருட்கள் விழும் என நாசா மதிப்பிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க 


Watch Video: 'கவிதையே தெரியுமா?’ ஜெயம் படமாக மாறிய பவன் கல்யாண் யாத்திரை.. பங்கமாய் கலாய்த்த ரோஜா...


Senthil Balaji Discharge : காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.. புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் செந்தில் பாலாஜி