சுமார் 20,000 குப்பைகள் விணிவெளியில் இருப்பதாகவும் இதனால் வரும் காலங்களில் விண்வெளியில் விபத்துகள் ஏற்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


பூமியின் மேற்பரப்பில் பல்வேறு நாடுகள் அனுப்பும் செயற்கைக்கோள்கள் செயல்பட்டு வருகிறது. இன்று இருக்கும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் மனிதர்களின் தேவைக்காக உருவாக்கப்படுகிறது. தொலைபேசி, தொலைக்காட்சி, இணையதளம் என இன்று நாம் தொழில்நுட்பங்கள் சூழ் உலகில் வாழ்ந்து வருகிறோம். அதுமட்டுமல்லாமல், புவிசார் மாற்றங்கள், வானிலை தகவல்கள், வணிகத்துறை, வங்கிகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் செயற்கைக்கோள் மூலம் தான் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு செயற்கைக்கோளுக்கும் ஆயுட்காலம் உள்ளது. அது முடிந்ததும் மீண்டும் செயற்கைக்கோள்கள் அதற்கு மாற்றாக அனுப்பப்படுகிறது. செயலிழந்த செயற்கைக்கோள்கள் விண்ணில் கழிவுகளாக மிதக்கும். இவை தான் விண்வெளி குப்பைகள் என அழைக்கப்படுகிறது. 


இதனால் விண்வெளியில் குப்பைகள் அதிகமாகி வருகிறது. சுமார் 20,000 குப்பைகள் தற்போது விண்வெளியில்  இருப்பதாக நாசா தரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த குப்பைகள் பூமிக்கு மேலே சுழன்று வருவதால், பூமிக்கு ஆபத்து ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் செவ்வாய் கிரகம், நிலவு மற்றும் விண்வெளியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அனுப்பப்படும் விண்கலகள் மற்றும் இந்த குப்பைகள் இடையே மோதல் ஏற்பட்டு விபத்து நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே விண்வெளியில் செயலில் இல்லாத செயற்கைக்கோள், விண்வெளி கழிவுகளால் மாசுபடுகிறது. இந்த வருடம் விண்ணில் ஒன்வெப் நிறுவனத்தின் 550 செயற்கைகோள்கள், ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் 3,500 செயற்கைகோள்கள், ஸ்டார்லிங்கின் 12,000 செயற்கைகோள்கள, அமேசான் கியூபர் புராஜக்ட்டின் 3,236 விண்கலங்களையும் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.


தற்போது 9000 செயற்கைக்கோள் விண்வெளியில் இருப்பதாகவும், 2030 ஆம் ஆண்டுக்குள் 60,000 செயற்கைக்கோளாக இது அதிகரிக்கும் என பிரிட்டன் அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் விண்வெளி குப்பைகள் 100 டிரில்லியன் அளவு வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளி விதிகளின் படி, செயலிழந்த செயற்கைக்கோள்களை மீண்டும் பூமிக்கு கொண்டு வர வேண்டும் அல்லது சுயமாக அழித்துக்கொள்ளும்படி வடிவமைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


சமீபத்தில் நாசா தரப்பில் விண்ணில் செலுத்தப்பட்ட ஆர்டெமிஸ் 1 மீண்டும் பூமிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விண்வெளி குப்பைகள் காலபோக்கில் ஒன்றோடு ஒன்று மோதி பெரிய விபத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள். அதேபோல் பூமிக்கு மிக நெருக்கமாக வந்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் கூறப்படுகிறது.


Jung Chae-yul Death: உலகப்புகழ்பெற்ற தென்கொரிய நடிகை.. 26 வயதிலே மர்ம மரணம்..! பெருத்த சோகத்தில் ரசிகர்கள்..!


H3N8 Bird Flu: உலகிலேயே முதல் முறை.. பறவைக்காய்ச்சல் வைரசுக்கு மனித உயிரிழப்பு..! என்னதான் நடந்தது?


World Covid Spike: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 65.78 கோடியாக அதிகரிப்பு.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்..