உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.50 கோடியாக உயர்ந்துள்ளது.


கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று சீனாவில் பரவத் தொடங்கியது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. தடுப்பூசிகள் பயன்பாடு மற்றும் விஞ்ஞான உலகின் தொடர் முயற்சிகள் காரணமாக பெருந்தொற்று ஒரு வழியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.


தற்போது மீண்டும் உலக அளவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68  கோடியே 50 லட்சத்து 13 ஆயிரத்து 517 ஆக அதிகரித்துள்ளது. அதில் 2 கோடியே 3 லட்சத்து 41 ஆயிரத்து 969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 68 கோடி பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் 65 கோடி 78 லட்சத்து 335 ஆயிரத்து 558 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 68 லட்சத்து 38 ஆயிரத்து 548 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


இந்தியாவில் புதிதாக 5676 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 37,000 கடந்து பதிவாகியுள்ளது. ஆனால் கடந்த மூன்று நாட்களாக தினசரி தொற்று பாதிப்பு குறைவாக பாதிவாகி வருகிறது. சனிக்கிழமையன்று தினசரி தொற்று பாதிப்பு 6000 ஐ கடந்தது ஆனால் கடந்த மூன்று நாட்களாக குறைவாக பதிவாகி வருகிறது. நேற்றைய தினத்தை ஒப்பிடும் போது இன்று புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.


தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்புவர்களில் சதவீதம் 98.73 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது என மத்திய சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 13,745 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மகாராஷ்டிராவில் 4667 பேர், டெல்லியில் 2338 பேர், குஜராத்தில் 1932 பேர், தமிழ்நாட்டில் 2099 பேர்- என மொத்தம் 37, 093 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கொரோனா தொற்று பரவலின் காரணமாக ஹரியானா, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக பாதிப்பு இருக்கும் கேரளாவில் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், பிற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசத்தை கட்டாயமாக அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


TN Assembly: கொரோனா அதிகரித்தால் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படும்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..


India Corona Spike: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் 21 பேர் உயிரிழப்பு.. 37,000-ஐ கடந்த பாதிப்பு..