நெட்ப்ளிக்ஸில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற தொடர் ஜாம்பி டிடெக்டிவ். இந்த சீரிசில் நடித்த தென்கொரிய நடிகை ஜூங் சாய்-யுல்.  இவருக்கு தென்கொரியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், இவர் நேற்று அவர் அவருடைய வீட்டில் கடந்த திங்கள்கிழமை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 


நடிகை உயிரிழப்பு


26 வயதே ஆன பிரபல நடிகை ஜூங் யுல் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை மட்டுமின்றி பிரபல மாடலாகவும் விளங்கி வந்த அவரது பட விவகாரங்களை கவனித்து வந்த எஸ் நிர்வாகம் அவரது உயிரிழப்பை உறுதி செய்துள்ளது.




இந்த சம்பவம் தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ நமது இதயத்தை உடைக்கும் சோகமான செய்தியை வெளியிடுகிறோம். நடிகை ஜூங் சாய் யுல் கடந்த 11-ந் தேதி(நேற்று) நம்மை விட்டு சென்றுவிட்டார். நம் அனைவரையும் விட மிக அதிக துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினரின் விருப்பப்படி, அவரது இறுதிச்சடங்கு மிக அமைதியான முறையில் நடக்கும். நடிப்பில் எப்போதும் தீவிரமாக இருந்து வந்த ஜூங் யுல் ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். வீண் வதந்திகளை பரப்புவதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.”


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரசிகர்கள் சோகம்:


அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள அதே வேளையில், பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. 26 வயதே ஆன இளம் நடிகை திடீரென உயிரிழந்த காரணம் குறித்து ரசிகர்கள் தீவிரமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அந்த நாட்டு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.


தற்போது உயிரிழந்துள்ள பிரபல நடிகை ஜூங் யுல் கடந்த 1996ம் ஆண்டு செப்டம்பர் 4-ந் தேதி பிறந்தவர். சிறு வயது முதலே நடிப்பில் ஆர்வம் கொண்ட ஜூங் மாடலிங்கில் முதலில் நுழைந்தார். பின்பு மாடலிங்கில் இருந்து நடிப்புலகில் நுழைந்தார். 2016ம் ஆண்டு வெளியான டெவில்ஸ் ரன்வே என்ற நிகழ்ச்சி மூலம் தனது திரையுலக வாழ்வை தொடங்கினார்.




2020ம் ஆண்டு வெளியான நெட்ப்ளிக்ஸில் வெளியான ஜாம்பி டிடெக்டிவ் வெப்சீரிஸ் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த தொடரில் இவர் பே யூன் மி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடைசியாக வெட்டிங் இம்பாசிபிள் என்ற படத்திலும் நடித்திருந்தார்.  அவரது உயிரிழப்பு குறித்து பல்வேறு வதந்திகளும் ஒருபுறம் இணையத்தில் உலா வரும் நேரத்தில், அவரது உயிரிழப்பிற்கு ரசிகர்கள் மிகுந்த வேதனையையும், சோகத்தையும் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க: Raghava Lawrence : 150 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்ற ராகவா லாரன்ஸ்... ஒத்திவைக்கப்பட்டதா ருத்ரன் ரிலீஸ் தேதி... காரணம் என்ன?


மேலும் படிக்க: Yaathisai: 6 நாட்களில் 6 மில்லியன் வ்யூஸ்... பாகுபலி, PS-க்கு சவால்விடும் யாத்திசை மேக்கிங் வீடியோ