Rahul Gandhi: தெலங்கானா மாநிலம் கொல்லப்பள்ளியில் அதிகாலையில் நடைப்பயணத்தை தொடங்கிய ராகுல் சிறிய அளவில் மாரத்தான் நடத்தி அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கட்சியை மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், ராகுல் காந்தி தன்னுடைய பயணத்தை தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கினார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணம் தற்போது 53-வது நாளை எட்டியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திராவை அடுத்து தற்போது தெலங்கானாவில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 1,230 கி.மீ வரை யாத்திரை மேற்கொண்டிருக்கிறார். இதனை அடுத்து கடந்த 23ஆம் தேதி தெலங்கானா மஹபூப் நகர் குடிபெல்லாவை வந்தடைந்தார். தெலங்கானா வந்தடைந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று தெலக்கானா கொல்லப்பள்ளியில் அதிகாலையில் நடைப்பயணத்தை தொடங்கினார். அப்போது சிறிய அளவில் மாரத்தான் நடத்தி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். நடைபயணம் முழுவதும் மக்களை சந்தித்து ராகுல் காந்தி உரையாடல் மேற்கொண்டு வருகிறார். இதில், பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக ஆந்திராவில் ஒற்றுமை நடைப்பயணத்தின்போது மக்கள் கூட்டம் சுற்றியிருக்க ராகுல் காந்தி ஒரு வயதான பெண் குழந்தையுடன் பேசிய வீடியோ வைரலானது. அந்த குழந்தை, ராகுல் காந்தியின் தோளைத் தட்டி ஆசிர்வதிக்கிறார். இறுதியில், வயதான பெண், அவரை கட்டித்தழுவி இரண்டு கண்ணத்திலும் முத்தமிடுகிறார். இந்த வீடியோ வைரலாகி வந்தது. ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்த பயணம் 50 நாட்களை கடந்துள்ள நிலையில், அவர் தினந்தோறும் மக்களை கவர்ந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Devar Jayanthi: "நம் நாட்டிற்கு தேவர் ஆற்றிய பங்கு தலை சிறந்தது” - பிரதமர் மோடி புகழாரம்..!