வருட இறுதி விடுமுறைக்காக ஊருக்குப் பயணப்பட்டிருந்த சேவ் தி சில்ரன் (Save the children) அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட முப்பதுக்கும் மேற்பட்டோர் எரியூட்டப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதனால், இவ்வமைப்பு மியான்மரின் கயா பிராந்தியத்தில் தனது பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது.
எதிர்க் கட்சிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டது இராணுவம்தான் என்று வலுவாகக் குற்றம் சாட்டியிருக்கின்றன. தனது அமைப்பைச் சேர்ந்தவர்கள் பயணம் மேற்கொண்டிருந்த வாகனங்கள் எரிந்துபோய் கிடந்ததாக சேவ் தி சில்ரன் அமைப்பு கூறியிருக்கிறது.
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
அரசு ஊடகம், இராணுவம் சில ‘தீவிரவாதிகள்’ மீது தாக்குதல் நடந்தியிருப்பதாக செய்தி வெளியிட்டிருக்கிறது.
கரேனி மனித உரிமை பாதுகாப்பு அமைப்பு வெளியிட்ட புகைப்படத்தில் எரிந்துபோன உடல்களையும் மிச்சங்களையும் பார்க்க முடிந்தது. கிராமவாசி ஒருவர் தான் எரிந்துபோன 32 மனித உடல்களைப் பார்த்ததாகத் தெரிவித்திருக்கிறார். சேவ் தி சில்ரன் அமைப்பு 38 பேரைக் காணவில்லை என்று கூறியிருக்கிறது. உலகம் எங்கும் இருக்கும் மனித உரிமை அமைப்புகள் கண்டனக் குரல் எழுப்பி இருக்கின்றன.
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
கடந்த பிப்ரவரி 1 மியான்மர் இராணுவம், தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசைக் கவிழ்த்ததிலிருந்தே மியான்மர் எரிந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 1375 மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இராணுவத்துக்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் வன்முறைகளிலும் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதிலும் முடிகிறது. இராணுவம் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது. இராணுவ வீரர்களும் இந்த தாக்குதல்களில் இறந்திருக்கிறார்கள் என்பது மட்டுமே அதன் பதிலாக இருக்கிறது. இராணுவத்தின் இந்த அடக்குமுறையை எதிர்த்து போராடுபவர்கள் மீது வழக்குகள் அள்ளி இறைக்கப்படுகின்றன, பலர் சிறையில் தள்ளப்பட்டுக் கிடக்கிறார்கள்.
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்