நான்கு நாட்களாக காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த முதியவர் முதலை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


மாமிச உணவுகளான இறைச்சியை மட்டுமே விரும்பி சாப்பிடும் முதலை, காடுகளில் கிடைக்கும் மீன், தவளை, பறவைகளை சாப்பிடுவது வழக்கம். தேசிய பூங்காக்களில் மற்றும் பண்ணைகளில் வளர்க்கப்படும் முதலைகளுக்கு இறைச்சிகள் உணவாக வழங்கப்படுகிறது. இது இல்லாமல் ஏரி, ஆறு உள்ள நீர் நிலைகளில் வளரும் முதலைகள் கோழி, ஆடு ஏன் சில நேரங்களில் மனிதர்களை கூட விழுங்கும் என கேள்வி பட்டிருப்போம். அந்த மாதிரியான ஒரு அதிர்ச்சி சம்பவம் தான் மலேசியாவில் நிகழ்ந்துள்ளது. 


மலேசியாவின் சபா நகரில் வசித்து வந்த 60 வயதான அதி பங்சா என்பவர் நான்கு நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள் தேடி வந்தனர். அந்த பகுதியில் முதலை ஒன்று அசைய முடியாமல் இருந்ததை பார்த்த உறவினர்கள் அதன் வயிற்றை பிளந்து பார்க்க முடிவெடுத்துள்ளனர். இது குறித்து அறிந்த மாவட்ட மீட்பு குழு மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அவர்கள் பரிசோதித்ததில் முதலையின் வயிற்றில் காணாமல் போன முதியவர் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அதன் வயிற்றை கிழித்ததில் சடலமாக முதியவர் கண்டெடுக்கப்பட்டார்.  


4 நாட்களுக்கு முன்பு காணாமல் போன முதியவரை முதலை விழுங்கியுள்ளது தெரிய வந்தது. அந்த முதலை 14 அடி நீளம் மற்றும் 800 கிலோ எடை கொண்டதாக கூறப்படுகிறது. முன்னதாக முதலையை துப்பாக்கியால் சுட்டதில் அது உயிரிழந்து இருந்ததாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். மனிதனை  உயிரோடு முதலை விழுங்கிய சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று ஒரு சம்பவம் இந்தியாவிலும் கடந்த ஆண்டு நிகழ்ந்துள்ளது. 


மத்திய பிரதேசம் ஷியோபூர் மாவட்டத்தில் இருக்கும் ரகுநாத்பூர் கிராமத்தில் 7 வயது சிறுவன் ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் சிறுவன் வராததால் சந்தேகமடைந்த கிராமத்தில் ஆற்றில் இருந்த ராட்சத முதலையை கடைக்கு இழுத்து வந்தனர். அந்த முதலை சிறுவனை விழுங்கியதாக கூறி அதன் வயிற்றி கிழிக்க முயன்ற கிராமத்தினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். 2016-ஆம் ஆண்டு முதலை விழுங்கிய மனிதரை அதன் வயிற்றை கிழித்து மீட்கும் வீடியோவும் வெளியாகி வைரலானது. 


மேலும் படிக்க: விமானத்திலேயே சிறுநீர் கழித்த பெண்: வைரலாகும் வீடியோ- என்ன காரணம்?


கனவு வராமல் இருக்க தலையில் துளையிட்டு தனக்குத்தானே அறுவைசிகிச்சை செய்துகொண்ட நபர்!


America: இந்தியா செய்த ஒரு காரியம்.. உலக நாடுகளை அச்சுறுத்தும் அரிசி தட்டுப்பாடு.. அமெரிக்காவும் பரிதவிப்பு!