விமானத்தின் கழிவறையை 2 மணி நேரமாக பயன்படுத்த விடாமல் தடுத்ததால் பெண் பயணி ஒருவர், விமானத்தின் தரையில் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


அமெரிக்காவை சேர்ந்த ஸ்ப்ரைட் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் சென்றுள்ளார். அந்த பெண் அவசரமாக கழிவறையை பயன்படுத்த இருந்தபோது அதற்கு விமானத்தின் பணியாளர்கள் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. சுமார் இரண்டு மணி நேரமாக சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்ட அந்த பெண் வேறு வழியில்லாமல், விமானத்தில் தரையில் சிறுநீர் கழித்துள்ளார்.


அந்த பெண் விமானத்தில் சிறுநீர் கழித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், கருப்பு ஆடை அணிந்து இருக்கும் பெண்ணிடம் விமானத்தின் பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். அதற்கு அந்த பயணி, 2 மணி நேரமாக பாத்ரூமை பயன்படுத்த விடாமல் தடுக்கின்றனர். என்னால் சிறுநீரை  கழிக்க முடியாமல் இருக்க முடியவில்லை. இதற்காக நீங்கள் கைது செய்தாலும் கவலையில்லை என அந்த பெண் கூறுகிறார். 






விமானத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ப்ரைட் ஏர்லைன்ஸ் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. இது போன்ற சம்பவம் நடப்பது முதல் முறை இல்லை. இதற்கு முன்னதாக, 2018ம் ஆண்டு லண்டன் சென்ற விஸ் ஏர்ஃப்லைட் என்ற விமானத்தில் கழிவறையை பயன்படுத்த தடுத்ததால், பெண் பயணி ஒருவர் விமானத்திலேயே சிறுநீர் கழித்தார். அதற்கு பதிலளித்த ஏர்லைன்ஸ் நிறுவனன், விமானத்தில் எரிப்பொருள் நிரப்பும்போது கழிவறையை பயன்படுத்த அனுமதிக்கபடாது என்றும், இது வழக்கமான நடைமுறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதேபோன்ற ஒரு சம்பவம் இந்தியாவிலும் அரங்கேறியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் இருந்து நியூயர்க்கில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பெண் ஒருவரின் மீது ஆண் பயணி சிறுநீர் கழித்த விவகாரம் சர்ச்சையானது. அவர் மீது விசாரணைகள் நடத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 


மேலும் படிக்க: Shocking Report: ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை.. 8 பேர் பாலியல் வன்கொடுமையால் பாதிப்பு.. அதுவும் இந்த நாட்டிலா..? ஷாக் ரிப்போர்ட்!