கனவை கட்டுப்படுத்துவதற்கான மூளைக்குள் எலக்ட்ரிக் சிப் வைத்து தனக்கு தானே ஆப்ரேஷன் செய்து கொண்ட நபர், அதிகமாக ரத்தபோக்கு ஏற்பட்டதால் உயிரிழப்புக்கு அருகில் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


நாம் தூங்கும்போது அனைவருக்கும் கனவு வருவது இயல்பு. கனவுகள் நம் ஆழ்மனதின் வெளிப்பாடாக தூக்கத்தில் பிரதிபலிக்கும். கனவுகள் குறித்து பல சகாப்தங்களாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. பெருமூளை தூண்டப்படுவதால் வரும் கனவு கட்டுப்பாட்டு முறைகளை ஆய்வு செய்வதில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒருசிலருக்கு தூக்கத்தை விட்டு எழுந்ததும் கனவு நினைவில் இருக்காது. சிலருக்கு அந்த கனவு மீண்டும் மீண்டும் மறக்காமல் வந்து நினைவை ஏற்படுத்தும். கனவு தனி உலகமாக பார்க்கப்படும் நிலையில் ரஷ்யாவை சேர்ந்த ஒருவர் தனக்கு கனவு வராமல் இருக்க விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார். 


மைக்கேல் ரடுகா என்ற 40 வயது நபர் தனக்கு வரும் கனவுகளை கட்டுப்படுத்த முயன்றுள்ளார். யூடியூப் பார்த்து மூளையில் நரம்பு அறுவை சிகிச்சை செய்து கொள்வது எப்படி என தெரிந்து கொண்ட மைக்கேல் தனக்கு தானே மூளையில் அறுவை சிகிச்சை செய்யும் விபரீத முடிவுக்கு வந்துள்ளார். டிரில்லிங் மெஷினை கடையில் விலைக்கு வாங்கிய மைக்கேல், தனது தலையில் தனே ஓட்டை போட்டு மூளையினுள் எலக்ட்ரிக் சிப்பை வைத்து தைத்துள்ளார். தனக்கு தானே மூளையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதை இணையத்திலும் மைக்கேல் பதிவு செய்துள்ளார்.






இதைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது மண்டை ஓட்டை எக்ஸ்ரே செய்து பார்த்ததில் அதற்குள் எலக்ட்ரிக் சிப் இருந்தது தெரிய வந்தது. இந்த விபரீத முயற்சியில் துரதிர்ஷ்டவசமாக மைக்கேல் ரடுகா உயிரிழந்துள்ளார். சுமார் 4 மணி நேரம் தனக்கு தானே செய்து கொண்ட அறுவை சிகிச்சையில் ஒரு லிட்டர் அளவுக்கு ரத்தம் வெளியேறி மைக்கேல் இறப்புக்கு அருகில் சென்றதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


முன்னதாக தலையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட புகைப்படத்தை மைக்கேல் இணையத்தில் பகிர்ந்து கொண்டது வைரலாகியுள்ளது. ஓராண்டுக்கு முன்னதாகவே மூளையில் அறுவை சிகிச்சை செய்ய விரும்பியதாகவும், அதற்கு நரம்பியல் மருத்துவர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள் என்பதால் தானே அதை செய்து கொண்டதாகவும் மைக்கேல் கூறியுள்ளார். 


கனவு வராமல் இருக்க மூளைக்குள் சிப் வைத்து தைக்க முயன்ற சம்பவம் கேட்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.