உலகம் முழுவதும் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஒரு வழிபறி சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. ஆனால் வழிபறியில் ஈடுபட்ட நபரை இளைஞர் ஒருவர் பிடித்து கொடுத்துள்ளார். அது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகியுள்ளது. மேலும் அந்த வீடியோவை பார்த்து அந்த இளைஞருக்கு உள்ளூர் காவல்துறை பரிசளித்துள்ளனர். யார் அவர்? எப்படி காப்பாற்றினார்.
அமெரிக்காவின் ஓஹியோ பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 87 வயது மதிக்க தக்க மூதாட்டி ஒருவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் வந்த ஒருவர் அவரிடம் இருந்த பர்ஸை பிடுங்கி சென்று கொண்டு ஓடியுள்ளார். அந்த சமயத்தில் அருகே இருந்த 27 வயது இளைஞர் தேஷ்வான் பிரஸ்லி என்பவர் வழிபறி செய்த நபரை துரத்தி கொண்டு ஓடியுள்ளார். அந்த நபரை லாவகமாக சுற்றி வலைத்த பிரஸ்லி கார் பார்க்கிங் பகுதியில் அவரை கீழே தள்ளிவிட்டு அவரிடம் இருந்து மூதாட்டியின் பர்ஸை எடுத்து தந்துள்ளார்.
அவரின் இந்தச் செயல் அருகே இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் ஒருவரால் பதிவேற்றப்பட்டுள்ளது. இதை பார்த்த அப்பகுதி காவல்துறையினர் அந்த நபரை அழைத்துள்ளது. அத்துடன் அவருக்கு பரிசையும் கொடுத்துள்ளது. மேலும் அந்த மூதாட்டியையும் அழைத்து இவரை கௌரவப்படுத்தியுள்ளது. சிட்டிசன் விருதையும் இவருக்கு அளித்து காவல்துறை கௌரவப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த நபர் செய்த செயல் தொடர்பான சிசிடிவி காட்சி வீடியோவை பலரும் பார்த்து பகிர்ந்து வருகின்றனர். அத்துடன் இவரை பாராட்டியும் வருகின்றனர்.
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: படிமமாக்கப்பட்ட முட்டையில் டைனோசர் கரு... அரிய கண்டுபிடிப்பு!