2022 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆனி எர்னாக்ஸ்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


நோபல் பரிசானது உலகின் தலைசிறந்த விருதாக கருதப்படுகிறது. இவ்விருதானது, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறபபக பங்காற்றிய்வர்களுக்கு வழங்கப்படுகிறது.


இலக்கியத்திற்க்கான நோபல் பரிசு:


இந்நிலையில் 2022 ஆம் ஆண்டில், இலக்கியத்திற்க்கான நோபல் பரிசானது ,பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆனி எர்னாக்ஸ்-க்கு இன்று (அக்டோபர் 6 )அறிவிக்கப்பட்டுள்ளது. 






எதற்காக வழங்கப்படுகிறது தெரியுமா:


 "l occupation " என்ற நூலை எழுதியதற்காக பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ்-க்கு, இலக்கியத்திற்க்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.






1940 ஆம் ஆண்டு பிறந்த இவர்,  30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். பாலினம் மற்றும் சமத்துவம் தொடர்பான  பல நூல்களை எழுதியுள்ளார்






”எழுத்து என்பது அரசியல் சட்டம் , சமூக சமத்துவமின்மைக்கான கண்களை திறக்கும் சக்தி உள்ளது” என ஆனி எர்னாக்ஸ் தெரிவித்துள்ளார்.


Also Read: Nobel Prize 2022: மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றார் ஸ்வீடனின் ஸ்வான்டே பாபோ..! யார் இவர்...?


Also Read: Nobel Prize 2022 Chemistry: 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படும் வேதியியலுக்கான நோபல் பரிசு