2022 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு, 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக நோபல் தேர்வு குழு அறிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பேரி ஷார்ப்லஸ், கேரோலின் பெர்டோசி மற்றும் டென்மார்க்கைச் சேர்ந்த மார்டென் மெல்டால் ஆகிய மூவருக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு:
நோபல் பரிசானது உலகின் தலைசிறந்த விருதாக கருதப்படுகிறது. இவ்விருதானது, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
வேதியியலுக்கான நோபல் பரிசு:
இந்நிலையில் 2022 ஆம் ஆண்டில், வேதியியலுக்கான நோபல் பரிசு, 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக நோபல் தேர்வு குழு இன்று (அக்டோபர் 5) அறிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பேரி ஷார்ப்லஸ், கேரோலின் பெர்டோசி மற்றும் டென்மார்க்கைச் சேர்ந்த மார்டென் மெல்டால் ஆகிய மூவருக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிர் இயக்கவியலில் மூலக்கூறுகள் மற்றும் செல்களின் ஆய்வுகளுக்காக 3 பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இம்மூன்று விஞ்ஞானிகளும் , புற்றுநோய்க்கான மருந்துகளை கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் அலியான் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் கிளாசர் மற்றும் ஆஸ்திரியாவின் ஜீலிங்கருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
நாளை இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழ்ழங்கப்படவுள்ளது. ஆறு நோபல் பரிசுகளில் ஐந்து பரிசுகள் ஸ்வீடனிலிருந்து வழங்கப்படும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலிருந்து வழங்கப்படும்.