அமெரிக்காவில் , இந்திய-அமெரிக்க மாணவர் வருண் மணீஷ் சேடா தன்னுடன் தங்கியிருந்த கொரியாவை சேர்ந்த மாணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


 


இந்தியாவை பூர்வீகமாக கொண்ட  வருண் மணீஷ் சேடா அமெரிக்காவின் பர்டூ பல்கலைக்கழகத்தில் டேட்டா சயின்ஸ் பிரிவில் பயின்று வருகிறார். அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் உள்ள விடுதி ஒன்றில் கொரியாவைச் சேர்ந்த ஜூனியர் சைபர் செக்யூரிட்டி மேஜரும் சர்வதேச மாணவருமான ஜி மின் “ஜிம்மி” ஷா என்பவருடன் அறையை பகிர்ந்து வந்திருக்கிறார் வருண். இந்த நிலையில் கடந்த புதன் கிழமை காலை 12:45 மணியளவில்  காவல்துறை அழைப்பு எண்ணான 911க்கு கால் செய்து , மாணவரை கொலை செய்தது குறித்து அந்த கொரிய மாணவரே தகவல் கொடுத்திருக்கிறார்.


 






சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த பொழுது  மேற்கு விளிம்பில் உள்ள மெக்கட்ச்சியோன் ஹாலில்  வருண் இறந்து கிடந்ததாக போலீஸார் தெரிவித்தனர் மேலும் கொலை செய்த கொரிய மாணவரை கைது செய்து சிறையில் அடைத்து அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.  இந்நிலையில் கொலை செய்யப்பட்ட வருணின் , சிறு வயது நண்பர் அருணாப் சின்ஹா என்பவர் , கடந்த செவ்வாய் கிழமை இரவு நான் எனது நண்பர்களுடன் ஆன்லைனில் கேம் விளையாடிக்கொண்டிருந்தேன். அன்று வருண் எங்களுடன் விளையாட வரவில்லை. அன்று இரவு நான் நண்பர்களுடன் பேசிக்கோண்டு விளையாடிய பொழுது , எனக்கு அலறல் சத்தம் கேட்டது என குறிப்பிட்டுள்ளார்.






8 வருடங்களில் பர்டூவின் வளாகத்தில் நடந்த  முதல் கொலை இதுதான் என போலிசார் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் பர்டூ பல்கலைகழக மாணவர்கள் மறைந்த வருணுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கையில் மெழுகு வர்த்திகளை ஏந்தி , பல்கலைகழக வளாகத்தில் அமைதியாக அஞ்சலி செய்தனர்.