மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்வான்டே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அழிந்து போன மனித இனங்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் குறித்தான கண்டுபிடிப்புக்காக ஸ்வான்டே பாபோவுக்கு, நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்திற்கான நோபல் பரிசு:
நோபல் பரிசானது உலகின் தலைசிறந்த விருதாக கருதப்படுகிறது. இவ்விருதானது, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2022 ஆம் ஆண்டில், மருத்துவத்துறைக்கான நோபல் பரிசானது , ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்வான்டே பாபோவுக்கு இன்று (அக்டோபர் 3 )அறிவிக்கப்பட்டுள்ளது. அழிந்து போன மனித இனங்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் குறித்த அவரது கண்டுபிடிப்புக்காக ஸ்வான்டே பாபோவுக்கு, நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரபணு மாற்றம்:
ஸ்வாண்டெ பாபோ, கடந்த 1992 ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டின் மிக உயர்ந்த விருதை பெற்றார். இவர் சில ஆண்டுகளாக நியாண்டர்தால் மனிதர்கள் குறித்தான பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். மனிதன் எங்கிருந்து வந்தான். முற்கால மனிதருக்கும், தற்கால மனிதருக்கும் இடையேயான தொடர்பு குறித்தான ஆரய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். மேலும் ஹோமினின்கள் என்று அழைக்கப்படக் கூடிய, அழிந்து போன மனித இனங்களை பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
மேலும் தற்போதுள்ள மனித குலத்திற்கு நெருங்கிய தொடர்புடைய, முந்தைய காலத்து மனிதரான நியாண்டர்கள் குறித்தான ஆய்வுகளை மேற்கொண்டார். உலகில் அழிந்து போன ஹோமினின்கள் முதல் ஹோமோ சேப்பியன்கள் வரையிலான மரபணு மாற்றத்தை கண்டுபிடித்தார்.
மேலும் நியாண்டர்தால் குறித்தான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் இவர், குழுவினருடன் சேர்ந்து பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். இவரின் மனித பரிமாணம் குறித்தான ஆய்வு மிகவும் பிரபலமானது. இந்நிலையில் மனித பரிமாணம் குறித்தான இவரது ஆய்வுக்காக, இந்தாண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் ஆறு நாட்களுக்கு, நோபல் பரிசு அறிவிப்பு நடைபெற்று வருகிறது. நாளை இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது.