அமெரிக்காவில் 19 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் நான்கு பேரை சுட்டுக் கொன்றதோடு தன் செயல்களை ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் உள்ள மெம்ஃபிஸ் நகரைச் சேர்ந்த இந்த இளைஞரின் பெயர் எஸெகில் கெல்லி என முன்னதாகத் தெரிய வந்துள்ளது.


 






இவர் அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் பல இடங்களில் மொத்தம் 7 துப்பாக்கிச்சூடு தாக்குதல்களை இதுவரை நிகழ்த்தியுள்ளதாகவும் அத்துடன் தன் செயல்களை  ஃபேஸ்புக் பக்கத்தில் லைவாக பதிவிட்டு வருவதாகவும் மெம்ஃபிஸ் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.






 






இந்நிலையில், முன்னதாக இந்த நபர் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல் துறையினர், இந்நபர் தற்போது எந்தப் பகுதியில் இருக்கிறார் என்பதைக் கண்டறிய முடியவில்லை என்றும் பொதுமக்களை கவனமாக இருக்கும்படியும் எச்சரித்திருந்தனர்.


மேலும், இவரைக் கண்டறியும் வரை மெம்ஃபிஸ் நகர மக்கள் அனைவரையும் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியும் காவல் துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.


 






இந்நிலையில், முன்னதாக எஸெகில் கெல்லி இருக்குமிடத்தைக் கண்டறிந்த காவல் துறையினர் அவரைக் கைது செய்து காவலில் வைத்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




மேலும் படிக்க: The Royal Family Reunion: குடும்ப சர்ச்சைகளுக்கு நடுவே சர்ப்ரைஸ்...எலிசபெத்துக்கு ஒன்றாக அஞ்சலி செலுத்த வந்த வில்லியம்-கேட், ஹாரி-மேகன் தம்பதி!


Queen Elizabeth II Death : முதல்வர் ஸ்டாலின் முதல் ஜோ பைடன் வரை.. ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தலைவர்கள்!


Liz Truss : எலிசபெத் ராணி முன்பு...பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்ட லிஸ் டிரஸ்.. பதவியேற்பு விவரங்கள்..