அமெரிக்காவில் இருந்து , ஏற்கனவே 104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட நிலையில், அடுத்தகட்டமாக 487 பேரை திருப்பி அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிரடி உத்தரவில் டிரம்ப்:

அமெரிக்க நாட்டின் அதிபராக, கடந்த ஜனவரி 20 ஆம் தேதி டொனாலடு டிரம்ப் பதவியேற்ற நிலையில், அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதிலும், குறிப்பாக வெளிநாடு விவகாரங்களில் கடுமையான போக்கை எடுத்து வருவதையும் பார்க்க முடிகிறது. அதில் , அமெரிக்க குடிமக்களுக்கே முன்னுரிமை என்றும், அமெரிக்க வளங்களை, அமெரிக்கர்கள் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்றும் வெளிநாட்டினர் யாரும் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பறிக்க கூடாது என்ற முனைப்பில் இருப்பதை பார்க்க முடிகிறது. 

இதனால், அமெரிக்காவில் வாழும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் திட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார். அதிபரானதுமே , இத்திட்டத்தில் தீவிரமாக செயல்படுவதை பார்க்க முடிகிறது. முதலில் அண்டை நாடுகளான கொலம்பியா , மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்பும் முடிவை எடுத்தார். அதிலும், குடியேறிகள் நாடு கடத்தப்படும் போது கை-கால்களில் விலங்கு மாட்டி அனுப்பபட்ட நிகழ்வானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Also Read: அமெரிக்கா: இந்தியா வந்தடைந்த 104 சட்டவிரோத குடியேறிகள்! டிரம்ப்பிடம் இந்தியா சொன்னது என்ன?

இந்தியர்களை நாடு கடுத்திய அமெரிக்கா:

இந்நிலையில், கடந்த பிப். 5 ஆம் தேதி சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா. ராணுவ விமான மூலம் அனுப்பபட்ட 104 பேர், பஞ்சாப் மாநிலம் அமிர்சதரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கினர். இவர்கள் கை-கால்கள் கட்டப்பட்டதாகவும், கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுப்பபட்டதாகவும் தகவல்கள் வெளியாகினர். 

எதிர்க்கட்சிகள் கண்டனம்:

இதற்கு காங்கிரஸ் , திமுக, ஆம் ஆத்மி , சமாஜ்வாதி கட்சியினர் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து , நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்து , பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் என்ன செய்கின்றனர். இந்தியர்கள், அவமானத்தப்படும் வகையில் அழைத்து வரப்பட்டிருப்பதை பார்த்துக் கொண்டு, எதிர்ப்புகூட தெரிவிக்காமல் இருப்பது ஏன் என்றும், ஒரு சிறிய நாடு கொலம்பியா எதிர்ப்பு தெரிவிக்கிறது; பொருளாதரப்பில் முதல் 5 இடத்திற்குள் இருக்கும் இந்தியா கண்டிப்புகூட செய்யாதது ஏன் என பாஜக அரசுக்கு கடுமையான கேள்விகளை வைத்தனர் எதிர்க்கட்சிகள். 

அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

இதையடுத்து இதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்” இது வழக்கமான நடைமுறைதான். வெளிநாட்டினர் இது போன்று கட்டுப்பாடுகளுடன்தான் அனுப்பபடுவர். இந்தியர்கள் வந்த ராணுவ விமானத்தில் மருத்துவ வசதிகளும் இருந்தது. இதுபோன்றுதான், இதற்கு முன்னர் அனுப்பப்பட்டனர் என்ற பட்டியலையும் வெளியிட்டார். மேலும், சட்டவிரோதமாக குடியேறிய்வர்களை திரும்ப ஏற்றுக் கொள்வோம் என்றும் தெரிவித்திருந்தார். 

அடுத்து 487 பேர்

அமெரிக்காவில், சுமார் 7.5 இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறியிருப்பதாக தகவல்கள தெரிவிக்கின்றன. அதில் 15,000 பேர் அடையாளம் காணப்பட்டனர். நேற்றைய தினம் 104 பேர் அனுப்பபட்ட நிலையில் , மேலும் 487 இந்தியர்களை அடுத்தகட்டமாக நாடு கடத்த உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகவி, விரையில் அனுப்பப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன

அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை நாடு கடத்துவது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி () தெரிவிக்கையில் "நாங்கள் இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுபவர்கள் மீது சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள்  கூறி வருகிறோம் என தெரிவித்தார். 

இந்நிலையில், வரும் 12 ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா செல்லவும் உள்ளார். இந்த தருணத்தில் அடுத்தகட்டமாக நாடு கட்டத்தப்படும் இந்தியர்கள் கை-கால் கட்டபட்ட நிலையில் அனுப்பபடுவார்களா அல்லது கட்டுப்பாடுகள் இன்றி அனுப்பப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Also Read: Israel Hamas Ceasefire: டிரம்ப்பா- பைடனா.? இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு யார் காரணம் ?