அமெரிக்க நாட்டின் அதிபராக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து, அங்கு வாழும் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவோம் என தெரிவித்திருந்தார்.  முதற்கட்டமாக, மெக்சிகோவில் இருந்து குடியேறிய சட்டவிரோத குடியேறிகளை ராணுவ விமானம் மூலம் அனுப்பினார். அப்போது, மெக்சிகோ நாட்டினர் மரியாதைக் குறைவாக அனுப்பப்பட்டதாகவும், கைகள் கட்டப்பட்டு இருந்ததாகவும், ஒரு விமானத்தில் போதிய வசதியின்றி அனுப்பப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. இதனால், அந்த விமானத்தையே, தரையிறக்க மெக்சிகோ அரசு அனுமதிக்கவில்லை. இதற்கு, அமெரிக்காவும் கடுமையான வரி விதிக்கும் போக்கை எடுத்தது. இதையடுத்து, இரு தரப்பு நாட்டினரும் முறையான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, குடியேறிகளை மெக்சிகோ நாடு ஏற்றுக் கொண்டது.

சட்டவிரோத இந்திய குடியேறிகள்

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு வரை, அமெரிக்காவில் 7,25,000  பேர் சட்டவிரோதமாக இந்திய குடியேறிகள் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. அதாவது, சுற்றுலா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட விசாக்கள்  மூலம் சென்று, அதன் கால அளவு நிறைவடைந்ததும், சட்டவிரோதமாக அங்கேயே தங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்த தருணத்தில்,  அதிபராக பதவியேற்ற டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக , உரிய அனுமதியின்றி வசிக்கும் வெளிநாட்டினரை அனுப்பும் முடிவை தீவிரமாக எடுத்துள்ளார். இதன் முதற்கட்டமாக அமெரிக்கா ராணுவம் விமான மூலம் 104 குடியேறிகள், நேற்று அனுப்பட்ட நிலையில், இன்று இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் , விமானமானது தரையிறங்கியது. அந்த வீடியோ காட்சியை பிடிஐ செய்தி முகமை வெளியிட்டுள்ளது. 

அமெரிக்க அரசு அரசு சொல்வது என்ன?

இச்சம்பவம் குறித்து, அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளதாவது, குறிப்பிட்ட விவரங்களை பகிர முடியாது என்றாலும், அமெரிக்கா தனது எல்லை மற்றும் குடியேற்றச் சட்டங்களை தீவிரமாகச் செயல்படுத்துகிறது என்று கூறினார். 

"இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட விமானம் பற்றிய அறிக்கை குறித்து எங்களுக்குகு பல விசாரணைகள் வந்துள்ளன. அந்த விசாரணைகள் குறித்த எந்த விவரங்களையும் என்னால் பகிர முடியாது, ஆனால் அமெரிக்கா தனது எல்லையை தீவிரமாக பலபடுத்துகிறது, குடியேற்ற சட்டங்களை கடுமையாக்குகிறது, சட்டவிரோதமாக குடியேறியவர்களை அகற்றுகிறது என்பதை மட்டும் கூற முடியும் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

Also Read: Modi-Trump: மை டியர் பிரண்டு.! அமரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேசிய பிரதமர் மோடி..

இந்திய அரசு சொல்வது என்ன?

இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவிக்கையில், "சட்டவிரோத குடியேற்றத்திற்கு நாங்கள் எதிராக இருக்கிறோம், குறிப்பாக இது பல வகையான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையது. அமெரிக்காவிலோ அல்லது உலகில் எங்கோ, சரியான ஆவணங்கள் இல்லாமல் வசிக்கும் இந்திய நாட்டினரை இந்தியாவுக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் வெளியுறவுத்துறை தெரிவித்திருந்தது. 

Also Read: Israel Hamas Ceasefire: டிரம்ப்பா- பைடனா.? இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு யார் காரணம் ?

காங்கிரஸ் கண்டனம்

ஆனால், இதுகுறித்து கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர். அவர் தெரிவித்ததாவது, “ அமெரிக்கா, இந்தியக் குடிமக்களை மோசமாக நடத்துகிறது. இது குற்றவாளிகளைப் போல சங்கிலியால் கட்டப்பட்டு, இந்தியர்களை நாடு கடத்தும் விதமானது மனிதாபிமானமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

பிரதமர் நரேந்திர மோடி ஏன் அமைதியாக இருக்கிறார்? சுயமரியாதை எங்கே? வெளியுறவுறதுதுறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், நம் மக்களை இழிவுபடுத்துவதை நிறுத்த என்ன செய்கிறீர்கள்? இப்போதே பேசி செயல்படுங்கள்" என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.

மெக்சிகோ நாட்டினர் கைகளில் சங்கிலியால், கட்டப்பட்டு அனுப்பப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தியர்களும் அதே போன்று கைகள் கட்டுப்பட்டும், சிரமத்திடனும் அனுப்பட்டனரா என்றால், அதுகுறித்தான அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை கிடைக்கவில்லை.