அமெரிக்க ராணுவ விமானம் வயலில் விழுந்து நொறுங்கி விபத்து – 4 பேர் பலி!
வியாழக்கிழமை மகுயின்டனாவோ டெல் சுர் மாகாணத்தில் ஒரு இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதை பிலிப்பைன்ஸ் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது

தெற்கு பிலிப்பைன்ஸில் அமெரிக்க இராணுவ ஒப்பந்தம் செய்யப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு நெல் வயலில் அமெரிக்க இராணுவத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த நான்கு பேரும் உயிரிழந்ததாக அமெரிக்க இந்தோ-பசிபிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் ஒரு அமெரிக்க சேவை உறுப்பினரும் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களும் அடங்குவர்.
Just In




வியாழக்கிழமை மகுயின்டனாவோ டெல் சுர் மாகாணத்தில் ஒரு இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதை பிலிப்பைன்ஸ் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் உடனடியாக பிற விவரங்களை வழங்கவில்லை. விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்தும் இன்னும் தகவல் வெளியாகவில்லை. விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது.
ஒரு வழக்கமான பணியை இந்த விமானம் மேற்கொண்டு வந்தது, என்று இந்தோ-பசிபிக் கமாண்டோ, மிண்டானாவோ தீவில் நடந்த விபத்து குறித்து ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் அமெரிக்க-பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் ஒரு வழக்கமான பணியின் போது நிகழ்ந்தது என தெரிவித்துள்ளது.
அம்பாதுவான் நகரில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த நான்கு பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக மகுயின்டனாவோ டெல் சுரின் பாதுகாப்பு அதிகாரி அமீர் ஜெஹாத் டிம் அம்போலோட்டோ தெரிவித்தார்.
அவர்களின் குடும்பங்களுக்கு இன்னும் தகவல் தெரிவிக்கவில்லை என்பதால் உயிரிழந்தவர்கள் பெயர்கள் இன்னும் வெளியிடவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்தில் போலீசாரும் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். தடயங்கள் சேதாரம் ஆகாமல் இருக்கவே இத்தகைய நடவடிக்கை என காவல்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
விமானம் விபத்திற்குள்ளானபோது பயங்கர வெடிசத்தம் கேட்டுள்ளது. இதைக்கேட்ட உள்ளூர்வாசிகள் அப்பகுதியில் குவிந்துள்ளனர். அப்போது விமானத்தில் இருந்து புகை வந்துள்ளது.
இதைப்பார்த்தவர்கள் தீயணைப்புத்துறைக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
விமான விபத்தின் போது தரையில் இருந்த ஒரு நீர் எருமை கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் விபத்து நடந்த இடத்திலோ அல்லது அருகிலோ ஆட்கள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.