இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான தொடர் போரானது 15 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மதியம் போர் நிறுத்தமானது அமலுக்கு வந்தது. இந்நிலையில் , போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனா, அதிபராக நாளை பதவியேற்கவுள்ள டொனால்டு டிரம்ப்பா என பார்ப்போம்.
இஸ்ரேல் - ஹமார் போர்:
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் – இஸ்ரேல் இடையிலான போரானது தொடங்கியது. இதனால் இஸ்ரேல் தரப்பில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் ஹமாஸ் தரப்பில் பேரும் 47,000க்கு மேற்பட்டோரும் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. சுமார் 15 மாதங்களாக தொடர்ந்து நீடித்த போரானது, அண்டை நாடுகளான ஈரான், லெபனான் உள்ளிட்ட நாடுகளையும் சேர்த்து போரில் ஈடுபடும் நிலைக்குச் சென்றது. ஒரு கட்டத்தில் உலக போராக மாறுமா என்ற நிலைக்கும் சென்றது.
இதனால், இந்த போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் பலரும் கோரிக்கை வைத்தும் பலன் அளிக்கவில்லை. மேலும் , கடந்த ஆண்டு போர் நிறுத்தத்தை கொண்டுவர பேச்சுவார்த்தைக்கு பைடன் மத்தியஸ்தம் செய்ய முன்னெடுப்பு எடுத்தார். ஆனால், இந்த பேச்சு தொடர்ந்து நீடித்து கொண்டே வந்தது. மேலும் , அமெரிக்க தேர்தலும் கடந்த ஆண்டு நடந்த காரணத்தால் , அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியான முடிவை எடுப்பதில் தயங்கினார்.
Also Read: Ceasefire: விடியலை பார்க்கவுள்ள மக்கள்! இஸ்ரேல் - ஹமால் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.!
டிரம்ப் வெற்றி:
ஆனால், தேர்தலில் வெற்றி பெற்ற, டொனால்டு டிரம்ப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டு வருவேன் என தொடர்ந்து தெரிவித்து வந்தார். மேலும் , நாளை அதிபராக பதவியேற்க உள்ள நிலையில், அதற்குள் போர் நிறுத்தத்தை கொண்டு வரவில்லையென்றால் , இருதரப்பும் கடுமையான விளைவுகளை சந்திக்க கூடும் என எச்சரித்ததாக கூறப்படுகிறது.
டிரம்ப் அழுத்தம்:
மேலும், கத்தார் நாட்டில் நடைபெற்ற போர் நிறுத்த தொடர்பான ஒப்பந்தத்தில் மத்தியஸ்தராக அமெரிக்க மற்றும் கத்தார் நாடுகள் செயல்பட்டன. இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தையில் , டிரம்ப் கடுமையான் நெருக்கடிகளை கொடுத்ததாகவும் , போர் நிறுத்தம் செய்ய வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் யோசியுங்கள் என இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய தரப்பிடம் உறுதியாக சொல்லியிருக்கிறார்.
அப்போது , போர் நிறுத்தம் வேண்டாம் என்றும் , காசா பகுதியை கைப்பற்ற இன்னும் சில பகுதிகள்தான் உள்ளன, முழுமையாக கைப்பற்ற வேண்டும் என இஸ்ரேல் அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் , போர் நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தால், தங்களது ஆதரவை விலக்கி கொள்வோம் என கூட்டணி கட்சியினர் தெரிவித்து, பிரதமர் நெதன்யாகுவுக்கு, மேலும் நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்தன.
யார் காரணம்?
ஆனால், டிரம்ப் கொடுத்த நெருக்கடியால், நெதன்யாகுவினால் மாற்று கருத்து சொல்ல முடியாமல் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதாவது, போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் காரணமா என கேள்வி கேட்டனர், அதற்கு என்ன காமெடி பண்றீங்களா என கேட்டார்.
ஆனால், டிரம்ப் நாளை பதவியேற்கவுள்ளார், அதற்குள் போர் நிறுத்த செய்ய வேண்டும் என டிரம்ப் கொடுத்த அழுத்தமே காரணம் எனவும் கூறப்படுகிறது. பைடன் அதற்கான முன்னெடுப்பை எடுத்தாலும், டிரம்ப்பின் அழுத்தமே, போர் நிறுத்தத்திற்கு காரணம் என்றே சொல்லலாம்.
போர் நிறுத்த கொண்டாட்டத்தில் காசா மக்கள்