இயற்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவ்வப்போது வானத்திலும்,கடலிலும் நடக்கும் நிகழ்வுகள் மனிதர்களுக்கு பீதியையும், ஆச்சரியத்தையும் அளிக்கக்கூடியன. அப்படி ஒரு நிகழ்வு அர்ஜெண்டினாவில் நடந்துள்ளது.


சமீபத்தில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் பஞ்சுகளை குவியல் குவியலாக வானத்தில் வைத்தது போன்று மேகங்கள் உருவாகியிருந்தன. இந்த நிகழ்வு அர்ஜெண்டினா நாட்டின் காஸா கிராண்டேவில் கடந்த நவம்பர் 13ஆம் தேதி நிகழ்ந்தது.


IND vs NZ 1st Test LIVE: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜாவுக்கு 17வது அரை சதம் ; முதல் நாளில் 250-ஐ தாண்டிய இந்திய அணி


இந்த மேகங்களுக்கு மம்மட்டஸ் மேகங்கள் என்று பெயர். இவை மற்றொரு மேகத்தின் அடிவாரத்தில் இருந்து வெளிப்படும் புடைப்புகளால் உருவாகிறது. மேலும்,  இந்த மேகங்கள் இடியுடன் கூடிய மழை வரப்போகிறது என்பதையும் அல்லது ஆலங்கட்டி மழை வரப்போகிறது என்பதையும் குறிக்கும் என வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


 



இந்நிகழ்வை நேரில் கண்ட அர்ஜெண்டினாவைச் சேர்ந்த ஒருவர், “நான் இந்த பூமியில் ஏறக்குறைய 40 ஆண்டுகளாக இருக்கிறேன், இதுபோன்ற மேகங்களை நான் இதுவரை பார்த்ததில்லை” என்றார்.


 



அதேபோல் மற்றொருவர் கூறுகையில்,  “சனிக்கிழமை பிற்பகலில் வானம் இந்த அசாதாரண மேகங்களால் மூடப்பட்டிருந்தது. பின்னர் மின்னல், காற்று மற்றும் ஆலங்கட்டி மழையுடன் வலுவான புயல் வந்தது” என்றார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Maanaadu Review : ’வந்தான், வென்றான், சிம்புமாநாடு படம் எப்படி இருக்கு..?


20வது ஆண்டை நெருங்கும் சிம்பு: 11 ஆண்டுகளுக்குப் பின் வெற்றியை ருசித்த சோகம்.. எங்கே சறுக்கினார்?


Maanaadu Twitter Review: இது புரிஞ்சுக்குற டைம் லூப்.. எப்படி இருக்கு மாநாடு.. ட்விட்டர் ரிவ்யூ கலகலப்பு!


Shiva Shankar Health: சிவசங்கர் மாஸ்டரின் சிகிச்சைக்கு நிதியுதவி - சோனு சூட் உறுதி