சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் படம் மாநாடு(Maanaadu). சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆகுமென அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரம் வரை இருக்கா? இல்லையா? என்ற மோடிலேயே சென்ற மாநாடு காலை 8 மணிக்கு ரிலீஸ் ஆனது. முன்னதாக 5 மணி காட்சியும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மாநாடு படம் வெளியான நிலையில் அப்படம் குறித்து ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.