தெற்கு பிரேசில் நாட்டில் உள்ள ரியோ கிராண்ட டூ சுல் என்ற மாநிலத்தில் பலத்த புயல் தாக்கியதில் குறைந்தது 21  பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புயலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.






காலநிலை நிகழ்வு காரணமாக மாநிலத்தின் அதிகபட்ச இறப்பு எண்ணிக்கை இதுவே என்று ஆளுநர்  எட்வர்டோ லைட் கூறியுள்ளார். வெப்பமண்டல சூறாவளியாக வகைப்படுத்தப்பட்ட புயலால் சுமார் 60 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






50,000 பேர் வசிக்கும் நகரமான Mucum இல் ஒரு வீட்டில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் நிகழந்துள்ளது. திங்கள்கிழமை இரவு முதல் 1,650 பேர் புயலால் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதி கூட இல்லாமல் சிக்கித் தவிக்கின்றனர் என்று ரியோ கிராண்டே டூ சுல் மாநில அரசு தெரிவித்துள்ளது. அங்கு இருக்கக்கூடிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் கரையோரம் வசிக்கும் மக்கள் வீடுகளுக்கு மேல் ஏரி உதவி கோரும் வீடியோக்கள் சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.






Mucum இல் உள்ள சிட்டி ஹால், மக்கள் அடுத்த 72 மணிநேரத்திற்கு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளும் படி அறிவுறுத்தியுள்ளது. இறந்தவர்களில் ஒரு பெண் மீட்பு முயற்சியின் போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான தனது டிவிட்டர் பதிவில் "டகுவாரி ஆற்றில் பெண்ணை மீட்கும் முயற்சிகள் நடைபெற்ற போது, அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ரியோ கிராண்டே டூ சுலில் கடந்த ஜூன் மாதம் வெப்பமண்டல சூறாவளி புயல் தாக்கியது, இந்த புயலில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்” என குறிப்பிட்டுள்ளார். சுமார் 3000 த்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 


Modi Indonesia Visit: பாரத் சர்ச்சைக்கு மத்தியில் இந்தோனேசியாவுக்கு பறக்கும் மோடி! ஆசியான் மாநாட்டில் திட்டம் என்ன?


Pakistan Flight Crash: பாகிஸ்தான்: பயிற்சியில் ஈடுபட்ட விமானம்.. விழுந்து நொறுங்கியதில் 3 ராணுவ வீரரகள் உயிரிழப்பு