தென்மேற்கு பாகிஸ்தானில் நேற்றைய தினம் வழக்கமான பயிற்சியின் போது பாகிஸ்தான் கடற்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த மூன்று ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  


தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான குவாடரில் சீ கிங் (sea king) ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டது. இந்த பயிற்சி விமானத்தில் இரண்டு அதிகாரிகள் மற்றும் ஒரு பணியாளர் பயணித்து வந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. மேலும் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தாரையிறங்கும் சில நிமிடங்களுக்கு முன் தரையில் விழுந்து நொறுங்கியது. விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரண்டு ராணுவ அதிகாரிகள் மற்றும் ஒரு பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த உடனே அதிகாரிகள் மற்றும் மீட்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரந்தனர்.  இது குறித்த அந்நாட்டு கடற்படை தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், “ ராணுவ விமானம் பயிற்சியின் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 3 ராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை குழு அமைக்கபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.






இந்த விபத்து குறித்து முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப், வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இதே போன்ற ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்தது. அமெரிக்கா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், கிழக்கு திமோர் ஆகிய நாடுகளுடன் இணைந்து ஆஸ்திரேலியாவில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டது. ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் உள்ள கடற்கரை அருகே இந்த பயிற்சி நடைபெற்றது. இந்தக் கூட்டு பயிற்சியில் சுமார் 2500 ராணுவ வீரர்கள் கலந்துக்கொண்டனர். அப்போது பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதில் ஒரு பகுதியாக அப்போது அமெரிக்காவுக்கு சொந்தமான பெல் போயிங் வி-22 ஆஸ்ப்ரே என்ற விமானம் திவி தீவு நோக்கி பயணித்தது. அதில் 23 அமரிக்க கடற்படை வீரர்கள் இருந்தனர்.


ஆஸ்திரேலியாவில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் மெல்வில் தீவு அருகே சென்ற போது, அந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதனை அறிந்த மீட்பு குழுவினர் உடனடியாக மெல்வில் தீவுக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த விமானம் சுக்குநூறாக நொறுங்கி தரையில் விழுந்ததை கண்டு அதிர்ந்து போனர். இந்த விபத்தில் 3 அமெரிக்க ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


Aditya L1: அதிகாலையிலேயே இஸ்ரோ செய்த அடுத்த சம்பவம்: அடுத்தடுத்து மேஜிக் செய்யும் ஆதித்யா எல் 1


Sultan AlNeyadi: 6 மாதகால விண்வெளி வாழ்க்கை.. மீண்டும் பூமிக்கு திரும்பினார் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த சுல்தான் அல்நேயடி..!