இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போர் உலக நாடுகளை மிகவும் கவலையில் ஆழ்த்தி வருகிறது. இந்த போர் காரணமாக, காசா மிகவும் மோசமான நிலையில் உள்ளது. காசாவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் காசாவில் சிக்கியுள்ளனர்.


மருத்துவமனை மீது தொடர் தாக்குதல்:


அங்குள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள், தண்ணீர், உணவு போன்றவை கிடைப்பதில் மிகவும் சிரமமான நிலை  ஏற்பட்டுள்ளது. பல நாட்டினரும் காசாவில் உள்ள மக்களுக்கு உதவ முன்வந்தாலும், அவர்கள் வழங்கும் உதவிகள் எல்லையை கடந்து காசாவை சென்று சேர்வதில் கடும் சிரமம் உள்ளது.


வடக்கு காசா பகுதியில் ஷில் அபா மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை மிகப்பெரிய மருத்துவமனை ஆகும். இந்த மருத்துவமனையில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த மருத்துவமனை உள்ள பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அந்த மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல் காரணமாக அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


குழந்தைகள் உள்பட அப்பாவிகள் உயிரிழப்பு:


ஏற்கனவே, இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக நூற்றுக்கணக்கான பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகிய நிலையில், புகைப்படங்களும் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ஷிபாவில் உள்ள அந்த பெரிய மருத்துவமனையில் 1500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வரு 1500 மருத்துவ பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.


இஸ்ரேல் ராணுவம் போரை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஹமாஸ் படையினரும் தங்களது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பல உலக நாடுகள் வலியுறுத்தி வந்தாலும், சில நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


உலக நாடுகள் கவலை:


காசாவில் சிக்கியுள்ள மற்ற நாட்டினரை வெளியேற்றும் பணியிலும் அந்தந்த நாடுகள் ஈடுபட்டு வருகின்றனர். காசாவில் அமெரிக்கா உள்பட மற்ற நாட்டினரும் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காசாவில் இருந்து வெளியேற்றப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் ஐ.நா.வின் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காசாவில் உள்ள மருத்துவமனையில் 50 ஆயிரம் பேருக்கு வெறும் 4 கழிவறைகள் மட்டுமே இருப்பதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்த தகவல் உலக நாடுகளை மேலும் கவலையில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: காசாவில் போர் நிறுத்தம்..? பேச்சுவார்த்தையில் திருப்பம்.. இஸ்ரேல் கோரிக்கையை ஹமாஸ் ஏற்குமா?


மேலும் படிக்க: முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை காப்பாற்ற மத்திய அரசு அதிரடி.. மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு