வரும் டிசம்பர் 11 அன்று, இந்த சிறுகோள் பூமியின் சுற்றுப்பாதையில் நுழைய இருப்பதாக நாசா ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 4660 நீரியஸ் என்று இந்த சிறுகோள் பெயரிடப்பட்டிருக்கிறது. கடந்த 1982-ஆம் ஆண்டு இந்த சிறுகோள் கண்டறியப்பட்டது. அன்றிலிருந்து கடந்த இருபது ஆண்டுகளில் பூமிக்கு இவ்வளவு அருகில் இந்த சிறுகோள் வந்ததில்லை என நாசா குறிப்பிட்டுள்ளது. டிசம்பர் 11 அன்று பூமிக்கு மிக அருகில் இந்த சிறுகோளைப் பார்க்கலாம். பிரம்மாண்டமான இந்த சிறுகோள் ஈஃபில் டவரின் அளவில் உள்ளது.


330 மீட்டர் சுற்றளவு உள்ள முட்டையின் வடிவில் இருக்கும் 4660 நீரியஸ் இன்னும் இரண்டு வாரங்களில் பூமியிலிருந்து 2.5 மில்லியன் மைல்கள் தொலைவில் வந்திருக்கும். கேட்பதற்கு இது மிகபெரும் தூரமாகத் தோன்றினாலும், இது பூமிக்கு அருகில் இருக்கும் சந்திரனை விட பத்து மடங்குதான் தூரம்.  



ஆய்வாளர்களால் இது மிகவும் ஆச்சரியத்திற்குரிய சிறுகோளாகக் கருதப்படுகிறது. வாகான இதன் முட்டை வடிவம், நேரில் சென்று ஆய்வு செய்வதற்கு ஏற்ற பொருளாகப் பார்க்கப்படுகிறது. இதனிடம் இருக்கும் கனிமப்பொருட்களும் இதனின் கவர்ச்சிக்கு ஒரு காரணம். இதனிடம் பில்லியன் கணக்கில் மதிப்புள்ள நிக்கல், கொபால்ட், இரும்பு போன்ற கனிம வளங்கள் உள்ளன.


சிறுகோள்களிலிருந்து கனிமங்களை எடுக்கும் திட்டம் கடந்த 2010 முதல் பேசப்படும் திட்டமாக இருக்கிறது. ப்ளூ ஆரிஜின், ஸ்பேஸ் எக்ஸ் முதலிய தனியார் நிறுவனங்கள் தலை தூக்கிய பின்னர் இந்த திட்டங்கள் பெருமளவில் சாத்தியப்படும் ஒரு திட்டமாகக் கருதப்படுகிறது.


இன்னும் ஒரு வருடத்தில் நீரியசின் சுற்றுப்பாதைக்குள் ரோபோ இயந்திரக் கருவிகள் நுழைய முடியும் என்று ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டிருக்கிறது.


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்