”அன்றாடம் பயன்படுத்தும் ஒரு வார்த்தை, ஆனால் அதைப் பயன்படுத்துவதற்கு முன் எப்போதும் அதன் ஸ்பெல்லிங்கை ஒருமுறை சரிபார்த்துக் கொள்வோம்... உங்கள் அன்றாட வாழ்வில் தினசரி நீங்கள் சரிபார்க்கும் இத்தகைய வார்த்தைகள் எவை?”
இந்த சுவாரஸ்யமான கேள்வியை நம் அன்றாட வாழ்வில் கணிசமாகப் பங்காற்றும் தேடல் எந்திரமான கூகுள் முன்னதாக தன் சமூக வலைதளப் பக்கங்களில் எழுப்பி இருந்தது.
மேலும் படிக்க: `118 மில்லியன் டாலர்!’ - பெண் பணியாளர்களுக்குப் பாகுபாடு... இழப்பீடு கொடுக்க ஒத்துக்கொண்டது கூகுள்..
நெட்டிசன்கள் சுவாரஸ்ய பதில்
கூகுளின் இந்தக் கேள்விக்கு நெட்டிசன்கள் போட்டி போட்டு பதிலளித்து வரும் நிலையில், 2,000 லைக்குகளையும் நூற்றுக்கணக்கான ரீட்வீட்களையும் குவித்து இந்தப் பதிவு ட்விட்டரில் ஹிட் அடித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக License, Friend, Relieve, Believe,whether ஆகிய வார்த்தைகளை தங்கள் குழந்தைப் பருவம் முதலே ஒவ்வொரு முறை உபயோகிக்கும்போதும் அதன் ஸ்பெல்லிங்கை சரிபார்ப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் சில நெட்டிசன்கள் தங்களுக்கு google என்ற வார்த்தையை உபயோகப்படுத்தும்போதே சந்தேகம் ஏற்படுவதாகவும் குறும்பாகத் தெரிவித்துள்ளனர்.
செல்லப் பிராணி குறித்த கேள்வி
கூகுள் முன்னதாக இதேபோல் செல்லப் பிராணிகளான நாய்கள் தேடல் எந்திரமான கூகுளை எதற்காக பயன்படுத்தும்? என வேடிக்கையான கேள்வி ஒன்றை எழுப்பி நெட்டிசன்களை போட்டி போட்டு பதிலளிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்